Header Ads



மீராவோடை யூத் ஸ்டார் விளையாட்டு கழகத்தின் சீருடை அறிமுக விழா



(எம்.ரீ.எம்.பாரிஸ்)

மட்டக்களப்பு ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு மீராவோடை யூத் ஸ்டார் விளையாட்டு கழகத்தின் சீருடை அறிமுக விழாவும் வன்பந்து கிறிக்கட் சுற்று போட்டியும் சனிக்கிழமை 18.05.2013 ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் அதிகாரி எஸ்.ஐ.எம்.றியாஸ்,செயலகத்தின் முகாமைத்துவ உதவி உத்தியோகத்தர் கமால்தீன் ,மீராவோடை கிராம சேவை உத்தியோகத்தர் எ.எல்.எம்.பஸ்மின்,இலங்கை இளைஞர் கழக  தேசிய சம்மளன பிரதி நிதி எஸ்.எல்.நளீர் மற்றும் யூத் ஸ்டார் விளையாட்டு கழகத்தின் தலைவர் ஐ.எல்.எம்.பதுறுதீன் உப தலைவர் நவாஸ் ஆசிரியர் உள்ளீட்ட அதிதிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற கழகத்திற்கு நினைவுச்சின்னங்களை வழங்கி வைத்தனர்  அதிதிகளுக்கும் கழகங்களால் நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந் கிறிக்கட் சுற்று போட்டியில் மீராவோடை யூத் ஸ்டார் விளையாட்டு கழகம் ஓட்டமாவடி கிரோ லயன்ஸ் விளையாட்டு கழகத்தை 06 ஆறு விகட்களால் பெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 அதிதிகளுடன் வெற்றியீட்டிய யூத் ஸ்டார் விளையாட்டு கழக அணியினரையும் படங்களில் கானலாம். 






No comments

Powered by Blogger.