தீக்குளித்த பிக்குவின் உடல் தொடர்பில் பௌத்த மத தலைவர்களிடையே மோதல்
(ADT) கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் தீக்குளித்து உயிரிழந்த பௌத்த பிக்குவின் பூதவுடலை இரத்தினபுரி கஹவத்த பிரதேசத்திற்கு எடுத்துச் செல்வது தொடர்பில் பௌத்த மத தலைவர்களைக் கொண்ட இரு குழுக்களுக்கிடையில் மேதல் நிலை ஏற்பட்டுள்ளது.
பொரள்ளை தனியார் மலர்சாலை ஒன்றில் இன்று (26) முற்பகல் 10.45 மணியளவில் இடம்பெற்ற இந்த மோதலை கட்டுப்படுத்துவதற்காக மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்க அவ்விடத்திற்கு வந்துள்ளார்.
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்க மோதலை கட்டுப்படுத்த முயற்சித்துள்ள போதும் தற்போதும் மோதல் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment