Header Ads



பௌத்த பிக்கு தீக்குளித்து தற்கொலை - விசாரணை செய்ய ஐ.தே.க. வலியுறுத்து

இலங்கை தற்கொலைகளில்  உலக சாதனை படைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. மதுபான மற்றும் தற்கொலைகள் நுகர்வில் இலங்கை உலக அரங்கில் முன்னணி வகிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

போதைக்கு முற்றுப் புள்ளி என அரசாங்கம் பிரசாரம் செய்தாலும், உண்மையில் நிலைமை தலைகீழாகவே காணப்படுகின்றது. கண்டியில் பௌத்த பிக்கு ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள மேற்கொண்ட முயற்சி பாரதூரமானது.

இதற்கு யார் உந்து சக்தியாக அமைந்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்ததுடன்,

உடலுக்கு தீ மூட்டிக் கொண்டமையின் பின்னணியில் ஏதேனும் அரசியல் சக்திகள் செயற்பட்டனவா என்பது குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும்.

வாழ்க்கைச் செலவு, பாடசாலை பிரச்சினை, போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் எவரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்

No comments

Powered by Blogger.