கம்பளையில் வாகன விபத்து - மூன்றரை வயது சிறுவன் மரணம், பெற்றோர் படுகாயம்
(எம்.எம்.எம். ரம்ஸீன்)
தவுலகல தளவதுரை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் கம்பளை இல்லவதுரையைச் சேர்ந்த எம். அஸ்ரிஸ் என்ற மூன்றரை வயது சிறுவன்; உயிரிழந்துள்ளார்.
இதில் சிறுவனின் பெற்றோர் மற்றும் முச்சக்கரவண்டிச் சாரதி ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். நேற்றிரவு 9 மணியளவில் வெலிகல்ல – தளவதுரை பாதையில் முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் காயமடைந்நவர்கள் தற்போது கம்பளை வைத்தியசாலையில் சிகி;ச்சை பெற்று வருகின்றனர்.
இவ்விபத்து தொடர்பான விசாரனைகளை தவுலகல பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment