Header Ads



அரேபியன் போக்குவரத்து சுற்றுலாக் கூட்டம் - ஹிஸ்புல்லாஹ் டுபாய் பயணம்


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

                              அரேபிய நாடுகளுக்கும் ஆசிய நாடுகளுக்கும் இடையில் வருடாந்தம் இடம் பெறுகின்ற அரேபிய போக்குவரத்து சுற்றுலாக் கூட்டம்  ஐந்தாம் திகதி இடம்பெற இருக்கிறது. நான்கு நாட்கள் இடம்பெரும் இந்தக்கூட்டத்தில் இடம்பெறவள்ள விசேட கண்காட்சியில் இலங்கை பங்குபற்றுகின்றது. இலங்கைக்கான காட்சி கூடத்தினை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நாளை திறந்துவைப்பார். அத்தோடு ஐக்கிய அரபு ராட்சியத்தின் ஆட்சியாளரையும் பிரதியமைச்சர் சந்திக்க உள்ளார். 

                                அத்தோடு மலேசியா டுபாய் பஹ்ரைன் குவைத் ஆகிய நாடுகளுடைய சுற்றுலாப்பயணத் துறைக்குப் பொறுப்பான அமைச்சர்களையும் சந்திப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு இலங்கையில் சுற்றுலாத்துறையில் முதலீடு செய்வதற்காக டுபாய் நாட்டில் உயர் ரக ஹோட்டல் உரிமையாளர்களுடனும் முதலீட்டாளர்களுடனும் முகவர்களுடனும் விசேட கலந்தரையாடலுக்கு எற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

                            இம்மகாநாட்டில் கலந்துகொள்ளும் அமைச்சர்களுக்கும் விசேட பிரதி நிதிகளுக்கம் முதலீட்டாளர்களுக்கும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் 7ஆம் திகதி டுபாயில் உள்ள கிரேன்ட் ஹயாத் ஹோட்டலில் விசேட விருந்தளித்து கௌரவிக்க உள்ளார். அத்தோடு புதிய சுற்றுலா வலயம் வெளிநாட்டவரைக்கவரக் கூடிய விசேட வேலைத்திட்டங்கள் ஆகியவற்றைப் பார்வையிடவுள்ளார்.

                            இலங்கை நாட்டின் தூதுவராலயத்தைச் சேர்ந்த அப்துர் றஹீம் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். பொருளாதார அபிவிருத்தியமைச்சர் கௌரவ பசில் ராஜபக்ஸ அவர்களின் சார்பில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இக்கூட்டத்தில் கலந்துகொள்வதோடு அவருடன் இலங்கயின் 55 க்கு மேற்பட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சிறிலங்கன் எயார்லைன்சுடைய தலைவர் ஹொட்டல் அதிகார சபையின்தலைவர் உற்பட அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர். 

                             அத்துடன் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைப்பது தொடர்பாகவும் அவர்களது அடிப்படை வசதிகளை முன்னேற்றுவது தொடர்பாக டுபாய் பைத்துல் ஸகாத் நிதியத்துடனும் விசேட கலந்துரையாடல் ஒன்றினை  பிரதியமைச்சர் மேற்கொள்ளவிருக்கிறார். சுமார் ஒருவார காலம் பிரதியமைச்சர் டுபாய் அபுதாபி ஸாஜா போன்ற பிரதேசங்களில் தங்கியிருப்பதோடு பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளஇருப்பதாக பிரதியமைச்சரின் ஊடகசெயலாளர் முகம்மட் சஜி தெரிவித்தார்.

1 comment:

  1. What happened to money he took from Ceylinco Sharia Compliancs Bank?

    ReplyDelete

Powered by Blogger.