அரசு மீது முஸ்லிம்கள் கொண்டிருந்த நம்பிக்கை தவிடு பொடியாகியுள்ளது
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
முஸ்லிம் சமூகத்திற்காக குரல் கொடுத்த ஒரே காரணத்திற்காகவே ஆஸாத் சாலி பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னால் உறுப்பினர் என்.கே.றம்ழான் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மைக்காலமாக நாடுபூராவும் முஸ்லிம் சமூகத்திற்கும் புனித இஸ்லாத்திற்கும் எதிராக ஒரு சில பௌத்த இனவாத குழுக்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட பல்வேறு மத அடக்கு முறைக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு எவருமற்ற அனாதைச் சமூகமாக முஸ்லிம் சமூகம் இருந்த போது தயங்கமின்றி மிகவும் துணிகரமாக குரல் கொடுத்து உலகறியச் செய்ததுடன் இனவாதிகளிலுடன் நேரடியாக விவாதித்து முஸ்லிம் சமூகத்தின் உரிமைக்காக உரத்துக் குரல் கொடுத்த ஆஸாத் சாலி குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி இந்த நாட்டு முஸ்லிம்களை முழுமையாக கவலையடையச் செய்துள்ளது.
குறித்த ஆஸாத் சாலியின் கைது அரசாங்கத்தின் மீது முஸ்லிம்கள் அற்ப சொற்பமாக கொண்டிருந்த நம்பிக்கையையும் தவிடு பொடியாக்கியுள்ளதோடு முஸ்லிம் சமூகத்தின் கருத்து சுதந்திரத்திற்கு பாரிய அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளது
இன்று ஆட்சியில் அதிகமான முஸ்லிம் தலைமைகள் அதிகாரத்துடன் இருந்த போதிலும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக தோற்றுவிக்கப்பட்ட பல்வேறு மத அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கத் தயங்கிய போது துணிவுடன் குரல் கொடுத்தவர் ஆஸாத் சாலி அவரது கைது விடயத்திற்கு வேறு காரணங்களை காட்டி நியாயப்படுத்த முடியாது தான் குற்றப்புலனாய்வு பிரிவினரால் தேடப்படுவதாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஆஸாத் சாலி தெரிவித்த போது அதனை குற்றப்புலனாய்வு பிரிவினர் மறுத்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தது.
இன்று ஆஸாத் சாலி கைது செய்யப்பட்ட விடயம் முஸ்லிம்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகின்ற ஒரு விடயமாக காணப்படுவதோடு அதற்காக என்ன விதமான நியாயங்களை தெரிவித்தாலும் அதனை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்கின்ற மனநிலையில்லை என்பதே யதாரத்;தமாகும்.
ஆஸாத் சாலி தான் குற்றமற்றவர் என்றும் தனது குற்றம் நிரூபிக்கப்பட வேண்டும் எனவும் கோரி நோயுற்ற நிலையிலும் உண்ணாவிரதம் இருந்து வருவதானால் முஸ்லிம் சமூகத்திற்கு மேலும் கவலையையேற்படுத்தியுள்ளது.
எனவே முஸ்லிம் சமூகத்தின் உரிமைக்காக குரல் கொடுத்த ஆஸாத் சாலியை விடுதலை செய்வதற்கு கட்சி, இனமத, பேதங்களுக்கு அப்பால் அனைத்து அரசியல் தலைமைகளும் முயற்சிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்த காரியத்தை உங்க தலைவர் ஹகீமும் சேர்ந்துதான் போட்டுக்கொடுத்து நடத்திவைத்ததாக பத்திரிக்கைகள் பேசுகின்றதே..... அதை நீங்க கொஞ்சம் படிக்கலியா அறிக்கை விட முன்? அல்லது அல்தில் தெளிவு பெற்று விட்டீர்களா?
ReplyDeleteஅப்படி எதுவுமே இல்லை என்றால், உங்க பேச்சு உண்மை என்றால், உங்க பேச்சு உங்க கட்சியின் பேச்சு என்றால் ஏன் இன்னும் தாமதம்? உடன் அரசை விட்டு வெளி நடப்பு செய்யலாமே? அதற்கு முடியாது இல்லையா? நீங்கெல்லாம் மீடியாவுக்கு பேச வெட்கம், ரோசம், சொறன இல்லயா? கேக்குறவன் கேணயனா இருந்தா நீங்க இதுக்கு மேலும் பேசுவிங்க இல்லயா ரமழான்? உங்க பெயரு உங்களுக்கே பொருத்தமில்லையே??
இவர் யாரிடம் தெரிவித்திருக்கின்றார் அரசாங்கத்திடமா? இல்லை பொதுமக்களிடமா?
ReplyDeleteSLAHY.
ReplyDeleteபத்திரிகையில் எது சொன்னாலும் உடனே நம்பிவிடுவதுதானா? இதைத்தான் ஏற்கனவே உங்களுக்குச்சொல்லி இருக்கின்றார்கள், முந்திரிக்கொட்டைமாதிரி அவசரப்படவேண்டாம், அது ஒருபோதும் சரியான தீர்வைக்கொண்டுவராது, இது சமுகங்களிடையே குழப்பத்தை உண்டுபண்ணுபவர்களின் செயல், உங்களுக்கு பிடிக்காதவர்கள் என்றால் தூக்கிப்போட்டு நீங்கள் விரும்பியவாறெல்லாம் பேசுவது அழகல்ல என்னதான் இருந்தாலு ரமழான் ஒரு முஸ்லிம் அவருக்கு பொருத்தமில்லாத பெயர் என்று சித்தரிப்பது நமக்குள் வேண்டாம், ஏன் அவர் நல்லசெய்தியைத்தானெ சொல்லியிருகின்றார் ஏன் உங்களுக்கு அவருடனும் தனிப்பட்ட கோபமேதும் உண்டா. ஆசாத் சாலிக்கு சார்ந்த செய்தியை எழுதிவிட்டார் என்று பிடிக்கவில்லையா?
ஸ்லாஹி மற்றவர்களை குறைகூறுவதை நிறுத்துங்கள் இப்போதைய காலகட்டத்திற்கு நமக்குள் அடித்துக்கொள்வது அவசியமல்ல நம் ஒற்றுமைதான் அவசியம்.
Dear Brother Renees,
ReplyDeleteஉண்மையை ஏற்றுக்கொள்ளும் பக்குவமுள்ள சமூகமாக நீங்கள் மாற அல்லாஹ் துணை புரிவானாக.
பத்திரிகை கூறுவது எல்லாம் பொய் என்றால் ரமழான் கூறுவதும் பொய்தானே? அவர் கூட நான் இவ்வாறு கூறவில்லை என்று மறுப்பார். அல்லது, இது கட்சியின் கூற்றல்ல ரமழானின் தனிப்பட்ட கருத்து என்பார்கள். இதுதான் உண்மை. புநிதமான பெயரை வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்ற வெட்கமில்லையா என்பதுதான் எனது கேள்வி. விரும்பியவர் விரும்பாதவர் என்பதல்ல... அவர் சொன்னது நல்லசெய்தி என்றாலும் அவர் காங்கிரசில் இருந்து கொண்டு சொல்வது மக்களை எமாத்தும் செயல். ஏனெனில் காங்கிரஸ் அரசின் பங்காளி...
நாரே தக்பீர் அல்லாஹு அக்பர் என்பதற்கு அர்த்தம் கூட தெரியாமல் போலியாய் கத்தும் அலை, கூடமாய் நீங்களும் இருக்க வேண்டாம். உண்மையை பெசுங்ககள். பூனை பால் குடிப்பது போன்று உலகம் அறியாது என்று நினய்க்க வேண்டாம்.
Slahy...
ReplyDeleteநான் சொன்ன கருத்துக்களை ஒருதடவைக்கு நான்கு தடவை வாசித்துப்பாருங்கள். நீங்கள் கொஞ்சம் அவசர்க்குடுக்கைபோல இருக்கு ஆக அவசரம் ஒரு போதும் வேண்டாம்.. உங்களைப்போலானவர்களிடமிருந்து நான் இறைவனிடம் பாதுகாவல் தேடிக்கொள்கின்றேன். இனிமேல் எதுவும் வேண்டாம்... That's all....