Header Ads



சிரிய அகதிகளுக்கு குவைத் பெரும்தொகை நிதியுதவி



சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் தீவிரமடைந்து வருவதால் லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளாக லெபனான், ஜோர்டான், துருக்கி உள்ளிட்ட நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

இவர்களில் பாலஸ்தீன் மாநாட்டில் மட்டும் சுமார் 45 ஆயிரம் சிரியா அகதிகள் தஞ்சமடைந்துள்ளதால் இவர்களின் உணவு,உடை மற்றும் பராமரிப்புக்கு உலக நாடுகள் நிதியுதவி அளிக்க வேண்டும் என ஐ.நா. சபை வேண்டுகோள் விடுத்திருந்தது.

இதனையடுத்து, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் நிதியுதவி வழங்கி வருகின்றன.

இந்நிலையில், ஐ.நா. சபையின் வேண்டுகோளை ஏற்று 1 1/2 கோடி அமெரிக்க டாலர்களை குவைத் அரசு நன்கொடையாக வழங்கியுள்ளது.

இவ்வளவு பெரிய தொகையை ஒரே தவணையாக அகதிகள் மறுவாழ்வு நிதிக்காக வழங்கிய ஒரே நாடு குவைத் தான் என்று ஐக்கிய நாடுகள் அகதிகள் புனர்வாழ்வு கண்காணிப்பு ஆணையத்தின் தலைவர் ஜெனரல் பிலிப்போ கிராண்டி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.