பாலஸ்தீன தொலைக்காட்சியில் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கம் வித்தியாசமான நிகழ்ச்சி
டி.வி. நிகழ்ச்சிகளின் மூலம் சிறந்த பாடகர்களையும், ஆட்டக்காரர்களை தேர்ந்தெடுப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால் முதன் முறையாக பாலஸ்தீனை சேர்ந்த தொலைக்காட்சி ஒன்று அதிபரை தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறது.
பாலஸ்தீனத்தில் கடந்த 2005-ம் ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதற்குப் பிறகு அதிபரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு பாலஸ்தீனியர்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால் பாலஸ்தீனத்தில் உள்ள 'மான் டிவி' என்ற தொலைக்காட்சி 'தி பிரசிடெண்ட்' என்ற நிகழ்ச்சியை நடத்தி இந்த வாய்ப்பை மக்களுக்கு வழங்கியுள்ளது.
வாரம் ஒருமுறை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இவர்கள் நீதிபதிகளாக அமர்ந்திருக்கும் அரசியல்வாதிகள், பேராசிரியர்கள், தொழிலதிபர்கள் அடங்கிய குழுவினரின் அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். துளைத்தெடுக்கும் இந்த கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்து பல சுற்றுகளைக் கடந்தவர்களில் 15 பேர் அடுத்த கட்டத்துக்கு முன்னேறியுள்ளனர். ஜூன் மாத கடைசியில் நடைபெற இருக்கும் இறுதி சுற்றில் இவர்களில் ஒருவர் பாலஸ்தீன அதிபர் ஆகும் தகுதியுடையவர் என்று தேர்ந்தெடுக்கப்படுவார். இவருக்கு பரிசாக பாலஸ்தீனத்தின் தூதுவராக உலகை சுற்றி பார்க்கும் வாய்ப்பும், ஒரு காரும் வழங்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சி மூலம் புதிய அரசியல் தலைமுறையை உருவாக்கி உள்ளதாகவும், இதன் மூலம் பல திறமைகளை போட்டியாளர்கள் பெற்றுள்ளதாகவும் முன்னாள் மந்திரியும், நிகழ்ச்சியில் நடுவராக செயல்பட்ட கொலாட் இடாபிஸ் கூறினார்.

Post a Comment