அமெரிக்க குண்டுவெடிப்பு சந்தேக நபரின் உடல் இழுபறியின் பின்னர் நல்லடக்கம்
பாஸ்டன் மாரத்தான் போட்டியில் குண்டு வைத்ததாக கூறப்படும் டமேர்லன் ட்சர்னேவ், போலீசாரின் தேடுதலில் கொல்லப்பட்டார்.
பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடல் மாசாச்சூசெட்ஸ் நகரில் உள்ள இறுதி ஊர்வல ஏற்பாட்டாளர்களின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. உடலை புதைக்க இடம் வழங்க எந்த கல்லறையும் முன்வரவில்லை.
இந்நிலையில், விர்ஜினியாவின் டாஸ்வெல் நகரில் உள்ள ஒரு கல்லறையில் உடல் புதைக்கப்பட்டதாக டமேர்லன் ட்சர்னேவ்-வின் மாமா ருஸ்லன் ட்சர்னி நேற்று கூறினார்.
உடலை புதைப்பதற்கு உதவியவர்கள் யார்? என்பது பற்றி கூற மறுத்துவிட்ட அவர், ‘உடலை புதைத்தாகி விட்டது. அவ்வளவு தான்’ என்று கூறியுள்ளார்.
டமேர்லன் ட்சர்னேவ்-வின் உடலை ஏற்றுக் கொள்ள ரஷ்ய அரசாங்கம் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Post a Comment