புத்தளம் மின் பாவனையாளர் சேவை நிலையத்தின் கவனத்திற்கு..!
(எஸ்.எச்.எம்.வாஜித்)
கல்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் கடந்த 3 மாதகாலமாக அறிவித்தல் இன்றி மின் தடை அதிகமாக இடம்பெற்று வருவதாக இப்பிரதேச மக்கள் விசனம் தெரிவித்தனர்.
தற்போது நாட்டில் மிகவும் வெப்பமான காலநிலை காணப்படுவதனால் மதிய நேரங்களில் வீட்டில் இருக்க முடியாத நிலை எற்படுகின்றன மேலும் சிறுபிள்ளைகளுக்கு வெப்பதின் எதிர் விளைவாக கொப்பளங்கள் போன்ற நோய் ஏற்படுவதற்கான நிலை காணப்படுகின்றன.
வெள்ளிகிழமை நாட்களில் வெட்டுவதனால் ஜும்மா பிரசங்கத்தினை விட்டில் இருக்கும் பெண்கஞம் செவிமடுப்பது தற்போது 2 மாத காலமாக தடை பெற்றுள்ளதாக விட்டில் உள்ள பெண்கள் கவலை அடைகின்றனர்
மின் பாவனையாலர் நிலையத்தினால் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் மட்டும் முன்னோடி அறிவித்தல் மட்டும் வழங்கப்பட்டது.இருந்தும் தற்போது தொடர்ச்சியான மின் தடையினை எதிர்நோக்க வேண்டியதாக உள்ளது
விடயம் என்னவென்றால் கல்பிட்டி பிரதேசத்தில தான் நுறைச்சோலை அனல் மின்நிலையம் மற்றும் இந்தியா அரசாங்கத்தினால் கட்டிக்கொடுக்கப்பட்ட காற்றலை முலமான மின்னை உற்பத்தி நிலையமும் காணப்படுகின்றது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பதிக்கப்பட்ட மக்கள் வேண்டிகொள்கின்றனர்.

Post a Comment