நீரில் மூழ்கிய சிறுவர்கள் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி
(அனா)
ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவில் மீறாவோடை புளியடித்தீவு ஆற்றில் நீராடச் சென்ற இரண்டு சிறுவர்கள் இன்று (02.04.2013) மாலை 05.30 மணியளவில் நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் வைத்தயசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மீறாவோடை – 04 ஆலிம் வீதியைச் சேர்ந்த இரு சகோதரிகளின் பிள்ளைகளான ஏ.எச்.ரிப்னாஸ் (வயது 10) மற்றும் நஜிமுதீன் இல்ஹான் (வயது 12) ஆகிய சிறுவர்களே நீரில் மூழ்கியவர்களாவார்கள்.
இவர்களில் ரிப்னாஸ் என்ற மாணவன் முதலில் நீரில் மூழ்கியதைத் தொடர்ந்து அவரைக் காப்பாற்றும் நோக்கில் இல்ஹான் என்பவர் ஆற்றில் குதித்த வேலையில் இருவரும் நீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர்.
இவர்களது கூக்குரல் கேட்டு இவ் வேளையில் அவ் விடத்திற்குச் சென்ற பொது மக்களால் காப்பாற்றப்பட்டு மீறாவோடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நஜிமுதீன் இல்ஹான் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் ஏ.எச்.ரிப்னாஸ் மீறாவோடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Post a Comment