அங்குநொச்சிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா
(S.M.இஸ்ஹாக்)
அங்குநொச்சிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இன்று வியாழக்கிழமை (2013.05.02) பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினால் சாதனையாளர்களை கொரவிக்கும் வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வு பாடசாலை அதிபர் ளு.ஆ.சக்கரியா தலைமையில் பிற்பகல் 2.00 மணியளவில் நடைபெற்றது. அங்குநொச்சிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 2012 ஆண்டில் க.பொ.(சா த) பரீட்சை க.பொ ( உ த) பரீட்சை புலமை பரீட்சையில் சாதனை படைத்தோர் கௌரவிக்கப்பட்டார்கள்.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கெபிதிக்கொள்ளாவ வலய கல்விப்பணிப்பாளர் பு.ஆ.ர்.குணவர்தன கௌரவ அதிதியாக கெபிதிக்கொள்ளாவ வலய உதவிக் கல்விப்பணிப்பாளர் அல் ஹாஜ் ளு. மொஹமத் பாடசாலை அதிபர்கள் ஓய்வு பெற்ற அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றார்கள் கலந்து சிறப்பித்தனர்

Post a Comment