Header Ads



புதிய பாகிஸ்தானை உருவாக்க இம்ரான் கான் அழைப்பு


பாகிஸ்தான் தெரிக் இ-இன்சாப் கட்சியின் தலைவரும், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டனும் ஆன இம்ரான்கான், அந்நாட்டின் பாராளுமன்ற தேர்தலில் மியான்வாலி தொகுதியில் போட்டியிடுகிறார்.

தனது தொகுதியில் நேற்று வாக்கு சேகரித்த இம்ரான் கான், 'தேர்தலில் வாக்களிக்கும் இளைஞர்கள் உறவு, குடும்பம், நட்பு போன்ற நிர்பந்தங்களுக்கு இணங்கிவிடாமல் பாகிஸ்தானை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லக்கூடியவர்கள் யார்? என்பதை சிந்தித்துப் பார்த்து வாக்களிக்க வேண்டும்.

பழைமைவாத சிந்தனையுடன் செயல்பட்ட அரசியல்வாதிகளின் சகாப்தம் முடிந்துவிட்டது. புதிய பாகிஸ்தானை உருவாக்கும் முயற்சியில் பாகிஸ்தான் இளைஞர்கள் அணி திரள வேண்டும்' என்றார். 

No comments

Powered by Blogger.