Header Ads



இலங்கை முஸ்லிம்கள் Vs யூஸுப் அல் கர்ழாவி (படங்கள் இணைப்பு)



இலங்கை முஸ்லிம்கள் தனித்துவம் காப்பதோடு  பெரும்பான்மை சமூகங்களுடன் சுமுகமான  உறவுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் - கலாநிதி யூஸுப் அல் கர்ழாவி அறிவுறுத்தல்.

கட்டார் வாழ் இலங்கை முஸ்லிம்களின் அமைப்பின் அழைப்பின் பேரில் இலங்கை முஸ்லிம் கவுன்ஸிலின்  தலைவர் அல் ஹாஜ் என் எம் அமீன்,  சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றியத்தின் இலங்கைப் பிரதிநிதி கலாநிதி மஸிஹுதீன் இனாமுல்லாஹ் ஆகியோருடனான குழுவினர் கலாநிதி யூசுப் கர்ழாவி அவர்களை அவர்களது டோஹா காரியாலயத்தில் சந்தித்தனர்.

மேற்படி சந்திப்பின் பொழுது கருத்துத் தெரிவித்த கலாநிதி யூசுப் அல்- கர்ழாவி அவர்கள் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கும் பெரும்பான்மை சிங்கள பௌத்த மக்களுக்கும் இடையில் சுமுகமான நல்லுறவு வரலாறு நெடுகிலும் இருந்து வந்துள்ளதனை நாங்கள் அறிகின்றோம், என்றாலும் மூன்று தசாப்த கால போருக்குப் பின்னர் அமைதி நிலவும் இலங்கையில்  அண்மைக்காலமாக முஸ்லிம்களை இலக்கு வைத்து ஒரு சில தீவிர மதவாத சக்திகள் மேற்கொள்ளுகின்ற நடவடிக்கைகள் அந்த அழகிய நாட்டின் சமாதான சகவாழ்வை பொருளாதார சுபீட்சத்தை காவு கொண்டு விடக் கூடாதென முஸ்லிம் உலகம் எதிர்பார்க்கின்றது.

இலங்கை வாழ் முஸ்லிம்கள் இயக்கங்களாகவும் அமைப்புக்களாகவும் தங்களுக்குள் பிளவு பட்டு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்காது வேற்றுமைகளுக்கு மத்தியிலும் பொதுவான விவகாரங்களில் ஒன்று பட்டு ஐக்கியமாக செயற்படல் வேண்டும். தங்களது மத கலாச்சார தனித்துவங்களைப் பேணி நடக்கின்ற அதேவேளை பெரும்பான்மை சமூகங்களோடு புரிந்துணர்வை வளர்த்துக் கொண்டு தேசப் பற்றுடன் கூடிய சக்திகளுடன் இணைந்து இலங்கையில் நீதியும் சமாதானமும் இனங்களுக்கிடையில் சமாதான சகவாழ்வும் நிலைப்பதற்காக உழைக்க வேண்டும்.

மிகவும் சிறுபான்மையினரான தீய சக்திகளின் விஷமப் பிரச்சாரங்களுக்கு மத்தியில் இலங்கை ஜம்மியத்துல் உலமாவும் இலங்கை முஸ்லிம் கவுன்ஸிலும் ஏனைய சிவில் அரசியல் மற்றும் இஸ்லாமிய அமைப்புக்களும் ஒன்று பட்டு மிகவும் நிதானமாக செயற்பட்டமை வரவேற்கத் தக்கதாகும்.

அரபு இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்களை அழைத்து இலங்கை முஸ்லிம்கள் குறித்த அச்சம் கொள்ளத் தேவையில்லை என உங்கள் நாட்டு ஜனாதிபதி அவர்கள் அளித்துள்ள உததரவாதம்  மிகுந்த ஆறுதலைத் தருகின்றது.  

இலங்கையை ஒரு நட்பு நாடாக கருதும் அரபு முஸ்லிம் நாடுகள்  இலங்கையில் அமைதியும் சமாதானமும் பொருளாதார சுபீட்சமும் நிலவுவதனையே விரும்புகின்றனர். இலங்கை வாழ் முஸ்லிம்கள் இனங்களுக்கிடையில் நல்லுறவை வளர்க்கின்ற ஒரு நாடு நிலைமைச் சமூகமாக தொடர்ந்தும் திகழ வேண்டும். என்றும் குறிப்பிட்டார் .

மேற்படி குழுவில் கட்டார் வாழும் இலங்கை முஸ்லிம் அமைப்பின் பிரதி நிதிகளும் முஸ்லிம் கவுன்ஸில் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் பொறியியலாளர் அப்துல் ரஹ்மான் ஆகியோரும் ஷேய்க் பிர்தவுஸ் நளீமி, ஷேய்க் அப்துல் ஹபீல் ஆகியோரும்  இடம் பெற்றனர். 

சர்வதேச இஸ்லாமிய அறிஞர் ஒன்றியத்தின் தலைவரான கலாநிதி அல்லாம யூசுப் அல்-கர்ழாவி  அவர்கள்  உலகம் போற்றும் இஸ்லாமிய அறிஞர் மாத்திரமன்றி முஸ்லிம் உலகில் அரசாங்கங்களாலும் சிவில் தலைமைகளாலும்  மதிக்கப் படுகின்ற சன்மார்க்கத் தலைவருமாவார்.





5 comments:

  1. இவர் போற்றத்தக்க இஸ்லாமிய அறிவாளி. இவரை காபிர் என்று பத்வா கொடுத்த "அதி மேதாவி"களும் எம்மத்தியில் உள்ளனர்.

    ReplyDelete
  2. i please my bros and sisters to not to comment without any knowledge in a certain matter. it will return to you.first we must know who i am? and what qualification we have to comment a matter? please we must beahave not like non muslims, we have verry beautiful demonstration in islam.lets follow up.

    ReplyDelete
  3. plz dont attmpt to judge on the people, that's sole authority of ALLAH subhanahuwatha aala. ALLAH the almighty knows best.

    ReplyDelete
  4. நாம் ஒருவரை திட்டுவதை விட்டு அவர் செய்ததாக நாம் கருதும் குற்றங்களை அல்லாஹ்வின் மீது விட்டுவிடவேண்டும் ஒருவரை காபிர் என்று நாம் எப்படிக்கூருவது, இவர் அரபு உலகில் மிகவும் மதிக்கப்படக்கூடிய ஒருவர் ஆக இன்று நாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் இவர் மூலம் நமது சமூகத்திற்கு எப்படி நன்மையை பெற்றுக்கொள்லாம் என்றுதான் யோசிக்கவேண்டும் நமது சமூகத்தில் இருக்கும் ஒரு சாபக்கேடுதான் எதை எடுத்தாலும் எதிர் மறையாக விமர்சிப்பது, இவர் ஒரு நபி அல்லவே இவர் பரிசுத்தமானவர் என்று எதிர்பாற்பதற்கு நாம் செய்வதும் இல்லை செய்பவர்களை தட்டிக்கொடுத்து ஊக்குவிப்பதும் இல்லை நாம் கஷ்டத்தில் இருக்கும் போது யாரவது உதவி செய்தால் அதை ஏற்காது விடுவோமா?
    தயவு செய்து தவறாக விமர்சிப்பதை கைவிடுவோம் மீண்டும் இன்று மியன்மாரில் முஸ்லிம்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்கள் குறைந்த பட்சம் தேவையற்ற விமர்சனம் எழுதும் நேரத்தை மியன்மார் முஸ்லிம்களுக்காக பிரார்த்திப்பதற்கு செலவு செய்வோம்.

    ReplyDelete
  5. Tell those scholars not to critizise our beloved sahaab (ral) and find mistake as what Shia do.

    ReplyDelete

Powered by Blogger.