ஆப்கானிஸ்தானில் அமெரிக்க விமானம் விபத்துக்குள்ளாகும் நேரடி காட்சி (வீடியோ)
ஆப்கன் நாட்டின் தலைநகர் காபூல் அருகே அமெரிக்க கூட்டுப் படைகள் சென்ற விமானம் விபத்துக்கு உள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்.
காபூலுக்கு வடக்கில் உள்ள பக்ராம் விமான தளத்திலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் விபத்துக்கு உள்ளானதாம்., திங்கள் அன்று நிகழ்ந்த இந்த விமான விபத்தில் பலியான அனைவரும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்று ஆப்கன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இது குறித்த விபத்துச் செய்தி வெளியானவுடன் இந்த விபத்துக்கு தாங்களே காரணம் என்று தாலிபான் தகவல் வெளியிட்டது. ஆனால், அமெரிக்கக் கூட்டுப் படையினர் இதனை மறுத்தனர். இந்த விபத்துக்கு பயங்கரவாதிகள் சதி ஏதும் காரணமில்லை என்றும், இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment