Header Ads



முஸ்லிம்கள் கோழைகள் அல்லர்..!


(சத்தார் எம். ஜாவித்)      

வேண்டுமென்ற செயற்பாடுகள் அதனை தோற்றுவிப்பவர்கள் மீது  பாதிக்கப்படும் மக்களிடத்தில் இருந்து வெறுப்புகளையும் பிரச்சினைகளையுமே ஏற்படுத்தும். இது வரலாறு கற்றுக் கொடுத்த பாடமாகும்.

இலங்கையின் அரசியல் வரலாற்றை சற்று பின்னோக்கி பார்க்கும்போது இருந்த நிலைமைகள் தற்போதில்லை அன்று ஆட்சியில் இருந்தவர்கள் மக்கள் நலனிலும் அவர்களின் சமய நலன்களிலுமே அதிகம் ஆர்வம் கொண்டவர்களாக இருந்துள்ளனர் அதன் காரணமாக அவர்களின் ஆட்சி நேர்த்தியாக இடம்பெற்றதை வரலாற்றுச் சம்பவங்கள் மூலம் அறியக் கூடியதாகவுள்ளது. இதன் காரணமாக மக்கள் சமய ரீதியான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கவில்லை என்பதனையும் கூட வரலாறுகள் காட்டி நிற்கின்றன.

குறிப்பாக அக்காலத்தில் எந்தவொரு மத ஸ்தலங்களும் பிக்குகளால் ஆக்கிரமிக்கப்பட்டதாகவோ அல்லது தாக்கி உடைக்கப்பட்டதாகவோ அறியுமளவிற்கு தகவல்கள் இல்லை என்பது மட்டுமல்ல அக்கால ஆட்சியாளர்கள் அவ்வாறான ஈனச் செயல்களுக்கு இடம் கொடுக்கவுமில்லை என்பதும் வரலாற்று உண்மைகள்.

ஆனால் தற்கால அரசில் முஸ்லிம்களுக்கும் அவர்களின் சமயத்திற்கும் பௌத்த தர்மத்தை  விளங்காத  ஆனால் பௌத்தன் என்று மார்தட்டும் ஒருசில பௌத்த பிக்குகள் செய்யும் அட்டகாசமும் அடாவடித்தனமும் இலங்கையை ஒரு ஆபத்தான நிலைமைக்கு இட்டுச் செல்வதை காட்டி நிற்கின்றது.

மேற்படி நிலைமையை அவதானிக்கும்போது அமைதிக்கும், சமாதானத்திற்கும் குந்தகத்தன்மையை எற்படுத்தும் குழுக்கள் அரசாங்கத்துக்கு கட்டுப்படவில்லை, அல்லது அரசாங்கம் அவற்றை கட்டுப்படுத்தவில்லை என்ற இரு விடயங்களில்தான் பார்க்கக்கூடியதாகவுள்ளது. அரசாங்கம் இஸ்திரத் தன்மையை கடைப்பிடித்தால் குழப்ப நிலைமைகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையென்ற முடிவுக்கு வரலாம்.

தற்பொதைய அரசில்தான் முஸ்லிம்களுக்கும் அவர்களின் சமயத்திற்கும் மட்டுமல்லாது தமிழ் மக்களின் சமய விழுமியங்களுக்கும் பாரிய இழுக்குகள் ஏற்படுத்தப்பட்ட காலமாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. அதனை அரசுடன் இருக்கம் முஸ்லிம் அரசியல் வாதிகளும் புரிந்து கொள்ளவேண்டும்.

இன்று சர்வதேச மட்டத்தில் இலங்கையின் அவப்பெயர் செல்வதற்கு அரசாங்கத்தின் இஸ்திரமற்ற நிலைமையே காரணமென மார்க்க அறிஞர்கள் கவளை தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு இலங்கையின் இயல்பு நிலைமைகளை குழப்பி சமயத்தைக் காப்பாற்றுகின்றோம் என்று பகிரங்கமாக மார் தட்டும் பல தீவிர செயற்பாட்டாளர்கள் வெளிப்படையாகவே திரிகின்றனர். இவர்கள் எப்போது கைது செய்யப்படுவர்? இவர்களுக்கு என்ன தண்டனை? 

இவர்களை பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தினால்  இலங்கையின் அவப் பெயர் சர்வதேசம் செல்வதை குறைக்கலாம் என்பதனை விட்டுவிட்டு அமைதியாகவும், சமாதானமாகவும் இருக்கும் அப்பாவி சிறுபான்மை முஸ்லிம்களை வீண் வம்புக்கும், விதண்டாவாதத்திற்கும் செல்வதற்கு வழி வகுத்த இனவாதிகள் சுதந்திரமாக இருக்கும்போது  இனவாதிகளால் சமயத்திற்கு விடுக்கப்பட்ட சவாலை எதிர்த்து சமயத்தை பாதுகாக்கும் வகையில் ஈடுபடுபவர்களை எந்தவித காரணமும் இன்றி கைது செய்யப்படுவதானது எந்த வித்தில் நியாயம்? என முஸ்லிம்கள் கேட்டு கவளை கொள்கின்றனர்.

சமயம் என்ற ரீதியில் எந்தவொரு சமயத்தவனாக இருந்தாலும் அவன் அவனது சமயத்தில் நம்பிக்கை கொண்டவனாக இருந்தால் அவனின் சமயம் மீது இழுக்குகள் எற்படுத்தப்படும்போது அவன் சும்மா பார்த்துக் கொண்டிருப்பானா? அது யாராலும் முடியாது அல்லவா?

ஆனால் இன்று இஸ்லாத்திற்கு எதிராக பொதுபல சேனா, அரசுடன் ஒட்டிக்கொண்டிருந்து குழிபறிக்கும் ஜாதிக ஹெல உறுமைய என்பவற்றுடன் இன்னும் ஒரு சில இனவாத பௌத்த செயற்பாட்டாளர்கள் செய்துவரும் அநியாயங்களும், அட்டூழியங்களும், கொடுமைகளும் எந்த மனிதனாலும் பொறுத்துக் கொள்ள முடியுமா? ஆனால் முஸ்லிம்கள் இவ்வளவும் நடந்தும் புனித மிகு இஸ்லாத்தின் கோட்டுபாடுகளை கடைப்பிடித்து எவ்வளவு பொறுமையாக இருக்கின்றனர் என்பதனை தீய இனவாத செயற்பாட்டாளர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

மேற்படி மோட்டு தீய செயற்பாட்டாளர்கள்போல் முஸ்லிம்களும் செயற்படத் தொடங்கினால் இன்று இலங்கையில் நிலைமைகள் எவ்வாறிருக்கும்? எந்த விதத்திலாவது மேற்கூறப்பட்ட தீய என்னங்கொண்ட செயற்பாட்டாளர்கள் முஸ்லிம்களைத் தீண்டி வன்முறைகளை தோற்றி ஒருவருக்கொருவர் சண்டை பிடிப்பதையே தமத முழு நோக்காகக் கொண்டுள்ளதை முஸ்லிம்கள் அறியாதிருந்தால் தம்புள்ளைப் பள்ளிவாசல் உடைக்கப்பட்டபோதே முஸ்லிம்களும் சண்டையில் ஈடுபட்டிருப்பார்கள் அல்லவா?

ஆனால் முஸ்லிம்கள் கோழைகள் என்பவர்கள் அல்லர் உண்மையான மார்க்கத்தை கடைப்பிடிப்பவர்கள் மார்க்க கட்டுக்கோப்புக்களுக்கு கட்டுப்பட்டவர்கள். அமைதிகாப்பவர்கள், பொறுமை காப்பவர்கள். விட்டுக்கொடுக்கும் உயரிய குணமுடையவர்கள் என்பனவற்றை கடந்தகால பல வன்முறைகளுக்கு மத்தியில் பாடம் புகட்டியவர்கள் என்பதனை இங்கு தாராளமாகவே சுட்டிக்காட்டலாம்.

முஸ்லிம்கள் இவ்வாறு பொறமைககுகமேல் பொறுமை கொண்டவர்களாகவும் இலங்கையின் இறைமைக்கும், சமாதானத்திற்கும், அரசியல் சட்டங்களுக்கும், நீதிக்கும் பூரணமான மதிப்பளித்து இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு இழுக்கு ஏற்படாத வகையில் செயற்பட்ட ஒரு சமயத்தவர்கள்  என்றால் அது முஸ்லிம்களையே சாரும். இவ்வாறு நன்நோக்கம் கொண்ட ஒரு சமுகத்தின் சமயத்தை காக்கவேண்டியவர்கள் யார்? அதற்கு இழுக்குகள் ஏற்படும்போது பொறுப்புக் கூறவேண்டியவர்கள் யார்? என்பது போன்ற வினாக்களுக்கு விடைகாண்பது எவ்வாறு?

இந்தவகையில் பார்க்கும்போது இலங்கை வாழ் சகல முஸ்லிம்களும் அல்லாஹ்வின் உதவியுடன் பல்வேறுபட்ட துன்பங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் இழைக்கப்பட்டபோதிலும் முஸ்லிம்களை வலிந்து வன்முறைகளுக்கும், சண்டைகளுக்கும் இழுக்க முயற்சித்த இனவாதிகளுக்கு அவர்களின் வழிக்குச் செல்லாது புனித இஸ்லாத்தின் போதனையின்படி தக்க சமயத்தில் பொறுமை காத்து பாடம் புகட்டிய புத்தி ஜீவிகளாக விளங்குகின்றனர்.

மேற்படி விடயங்களை இனியாவது கவனத்தில் கொண்டு ஜனாதிபதியும், சட்டத்துறையும் இலங்கையில் முஸ்லிம்களின் சமயத்திற்கு பூரண பாதுகாப்பும். முஸ்லிம்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கி தேவையற்ற விதத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் சமயத்திற்காக குரல் கொடுத்த குரல்களை ஒடுக்காது விடுதலை செய்து அரசாங்கம் முஸ்லிம்களின் ஆதரவை தொடர்ந்தும் தக்க வைத்துக்கொள்ளவேண்டும் என புத்தி ஜீவிகள் கோரிக்கைகள் முன்வைக்கின்றனர்.

இலங்கை அரசியல் வரலாற்றில் அரசாங் ஆட்சியில் சிறுபான்மைச் சமுகங்கள் என்பவர்கள் இன்றியமைதாவர்கள். ஏனெனில் சிறபான்மைச் சமுகங்களின் பங்களிப்பு இல்லாமல் இலங்கையின் பாராளுமன்றத்தில் ஆட்சி அமைக்க முடியாது. 

இந்தவகையில் பார்க்கும்போது அரசாங்கம் இனவாதக் கட்சிகளைக் கொண்டு அரசை அமைக்க முடியாது. சிறுபான்மை மக்களை அரவனைத்து அவர்களுக்கான உரிமைகளையும், கௌரவத்தையும் கொடுத்து ஆட்சியின் பங்காளர்களாக உள்வாங்கும் செயற்பாடே இன்று அரசுக்குத் தேவை.

இவை எல்லாவற்றையும்  விட்டுவிட்டு அரசு இனவாத கட்சிகளை நம்பியிருந்தால் மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கவதற்கு ஒப்பானதாகவே அமையும்.

அரசாங்கம் நிலைத்திருக்க வேண்டுமானால் சிறுபான்மைச் சமுகங்களின் சமயங்களை முதலில் பாதுகாக்கவேண்டும். அதன் மூலம் சர்வதேசம் விரும்பும் ஒரு நாடாக, சர்வதேசத்தின் ஒத்துழைப்புகளுக்கும், உதவிகளுக்கும் உரித்துடைய நாடாக திகலும். மாறாக சர்வதேசத்துடன் முரண்பட்டு அவற்றின் எதிர்ப்புகளுக்கு உற்பட்ட நாடாக செயற்படுமானால் அது இந்நாட்டு மக்களுக்கு உகந்ததாக அமையாது.

எனவே இலங்கை அரசாங்கம் நாட்டின் நலனில் அக்கறை கொண்டிருக்குமானால் குறுகிய மற்றும் சுயநலன்களுக்கு அப்பால்  சகல சமயங்களையும் வேறுபாடின்றி ஒரே கண்ணோட்டத்தில் அனுகி இலங்கையின் ஒற்றுமைக்கும், சமாதானத்திற்குமான தூர நோக்கமுடைய  என்னங் கொண்டதாக செல்வதே வெற்றிக்கான வழிமுறையாகும்.

No comments

Powered by Blogger.