Header Ads



காத்தான்குடியில் விநியோகிக்கப்பட்டுள்ள துண்டுப்பிரசுரம்



காத்தான்குடி பஸ்மலா சந்தியில் உள்ள மையவாடிக் காணியில் நகரசபை அலுவலகக் கட்டடம் அமைப்பது தொடர்பான உண்மை விளக்கம் எனும் தலைப்பில் 17-05-2013 இன்ற இவள்ளிக்கிழமை காத்தான்குடி பிரதேசத்தில் ஜூம்மா தொழுகையின் பின் ஒரு துண்டுப்பிரசுரம் வெளியாகியுள்ளது. அந்த துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பின்வருமாறு



2 comments:

  1. ஊரின் அபிவிருத்திக்காகவே பள்ளிவாசலுக்குச் சொந்தமான மையவாடிக் காணியைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறும் தவிசாளர், ஏன் அது தொடர்பாக பள்ளிவாசல் நிர்வாகிகளுடன் எழுத்து மூலமான தொடர்பாடல்களை மேற்கொள்ளாமல் வாய் மூலமான பேச்சுவாhத்தைகளை மேற்கொண்டார்?

    அடையாளப்படுத்திய மையவாடிக் காணியில் பொதுமக்களின் கவனத்திற்காக 'இது நகர சபையின் புதிய கட்டடித்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள காணி' என ஒரு முன்னறிவித்தல் பலகையை நடுவதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

    4 கோடி ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள நகர சபைக் காரியாலயம், மற்றும் நகர சபைக்கு வருமானமீட்டும் கடைத் தொகுதியில் இருந்து ஏன் பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு 50 வீதத்தை அவர் கொடுப்பதற்கு முன் வர வேண்டும்?

    11ம் திகதி அடையாளங் காணப்பட்ட இக்காணியை அடைப்பது தொடர்பாகவும், அதில் 4 கோடி ரூபா செலவில் கட்டிடம் அமைப்பது தொடர்பாகவும் எந்த நகர சபைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது?

    11ம் திகதி இக்காணியை அடைப்பதற்காகக் கொள்வனவு செய்யப்பட்ட கம்பிக் கட்டைகள் மற்றும் தகரங்கள் போன்றவற்றைக் கொள்வனவு செய்வதற்கு சபையின் கொள்வனவுச் சபையும், நிதிக் குழுவும் பரிந்துரைகளை வழங்கியிருந்ததா? அதனை சபை உறுப்பினர்கள் பரிசீலித்து அங்கீகாரம் வழங்கினார்களா?

    இந்த வேலைத் திட்டம் தொட்ர்பாக பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளரின் அங்கீகாரம் பெறப்பட்டதா?

    கடந்த நகர சபையின் பதவிக்காலத்தில் அமெரிக்காவின் US AID நிறுவனம் காத்தான்குடிக்கான மத்திய பஸ் நிலையமொன்றை சகல வசதிகளுடனும், கடடைத் தொகுதிகளுடனும் நகர சபைக்கு நிர்மாணித்துத் தர முன்வந்த போது, அதனை மையவாடிக் காணியில் அமைக்கக்கூடாது என அந்த நகர சபையில் உறுப்பினராக இருந்த இன்றைய தவிசாளர், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா ஆகியோர் பின்னணியில் செயற்பட்டு தடுத்து நிறுத்தியதை இந்த ஊர் மக்கள் அனைவரும் நன்கறிவார்கள்.

    அந்த பஸ் நிலையத்தைக் கடடுவதற்கான ஒப்பந்தத்தை இன்றைய கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரான பொறியியலாளர் ஷிப்லி யே பெற்றிருந்தார்.

    அதற்கான ஆரம்ப வேலைகளில் அவர் ஈடுபட்டிருந்தபோது அங்கு துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. அவரது வீடும், பெறுமதியான வாகனமும் தாக்கப்பட்டது.

    அப்போது வராத ஊர் அபிவிருத்தியும், நகர சபைக்கான வருமானம் ஈட்டும் அக்கறையும் இப்போது அதே நபர் தவிசாளராக மாறிய பின் ஏப்படி ஏற்பட்டது? அதற்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவும் வரிந்து கட்டிக் கொண்டு களமிறங்கி இருப்பது ஏன்?

    25 வருட காலமாக இந்த மண்ணில் நாடாளுமன்ற உறுப்பினராக, மாகாண சபை அமைச்சராக, பிரதியமைச்சராக, மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராக எல்லாம் அரசியல் அதிகாரத்தைப் பெற்றுத் திகழ்கின்ற ஹிஸ்புல்லாஹ், இந்த ஊரின் எல்லைகளைச் சரியாக அடையாளப்படுத்தி எல்லையிட்டிருந்தரேயானால் இதுபோன்ற அபிவிருத்திகளை எல்லாம் செய்யக் கூடிய நிலப்பரப்பு இந்த ஊருக்கு தானாகவே கிடைத்திருக்கும். அவர் அதைச் செய்யவில்லை. ஒரு அரை ஏக்கர் காணியைத்தானும் இந்த ஊர் அபிவிருத்திக்காக அவர் பெற்றதாகச் சரித்திரமில்லை.

    இதுபற்றி முன்னாள் மாகாண சபை உறுப்பினர் யூ.எல்.எம்.என். முபீன் மாவட்ட அபிவிருத்திச் சபைக் கூட்டத்தில் பகிரங்கமாகவே எடுத்துரைத்துள்ளார்.

    எனவே, நமது ஊரின் எல்லையை முதலில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நிர்ணயிக்க வேண்டும்.

    இரட்டை ப் பிரதியமைச்சராக ஆட்சியில் இருக்கும் இக்காலப் பகுதியிலாவது அவர் இதனைச் செய்ய வேண்டும்.

    அதற்கு நகர சபை நிர்வாகமும், ஊரின் தலைமை சிவில் அமைப்பான சம்மேளனமும் வலியுறுத்த வேண்டும்.

    அவ்வாறு ஊரின் எல்லையை நிர்ணயித்த பின்னரே இத்தகைய பாரிய அபிவிருத்திகளை எல்லாம் இவர்கள் முன்னெடுமுக்க வேண்டும்.

    அவ்வாறின்றி எங்களின் மூதாதையர்களகளை அடக்கியுள்ள பள்ளிவாசல்களுக்குச் சொந்தமான மையவாடி நிலங்களை இவ்வாறெல்லாம் அத்துமீறி அபகரித்து கட்டிடங்கள் கட்டுவதை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    (அன்புடன் ஜப்னா முஸ்லிம் நிர்வாகிகளுக்கு! தயவு செய்து எனது கருத்தை முழுமையாகப் பிரசுரிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்)

    ReplyDelete
  2. i would like debate with asfer. so please he will accepted

    ReplyDelete

Powered by Blogger.