Header Ads



மருத்துவ உலகின் ஆச்சரியம்


அயர்லாந்தை சேர்ந்தவர் மரியா ஜோன்ஸ் எல்லியாட். கர்ப்பிணியான இவருக்கு டாக்டர்கள் ‘ஸ்கேன்’ செய்து பார்த்ததில் கருப்பையில் இரட்டைக் குழந்தைகள் வளர்ந்து வருவது தெரிய வந்தது. அதை தொடர்ந்து அவரை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். 

இந்த நிலையில் பிரசவ காலம் நிர்ணயிக்கப்பட்ட 4 மாதத்துக்கு முன்பே மரியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. எனவே, அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஒரு பெண் குழந்தை மட்டுமே பிறந்தது. அதற்கு ‘அமி’ என பெயரிட்டனர். கருப்பையில் மற்றொரு குழந்தை பாதுகாப்பாக இருந்தது. 

இதற்கிடையே குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை அமியை இன்கு பேட்டரில் வைத்து பராமரித்து வந்தனர். இந்த நிலையில் கருப்பையில் வளர்ந்த குழந்தையை பத்திரமாக காப்பாற்றி குறிப்பிட்ட காலத்தில் பிரசவிக்க செய்ய டாக்டர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஆனால் முதல் குழந்தை பிறந்த 87 நாள் கழித்து மற்றொரு பெண் குழந்தையும் பிறந்தது. அதற்கு கியாதி என பெயரிட்டனர். 

நீண்ட நாட்கள் இடைவெளியில் பிறந்த இந்த இரட்டை குழந்தைகள் தற்போது நலமாக உள்ளது. பொதுவாக, இரட்டை குழந்தைகள் அடுத்தடுத்து பிறந்து விடும். ஆனால் 87 நாட்கள் நீண்ட இடை வெளியில் இவை பிறந்துள்ளன. அதே நேரம் உயிருடன் நலமாக உள்ளது. இது மருத்துவ உலகில் அதிசயமான ஆச்சரியமானதாக கருதப்படுகிறது. மேலும், இடைவெளியில் பிறந்த இந்த இரட்டை குழந்தைகள் கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.