Header Ads



இம்ரான் கான் இரண்டில் வெற்றி, ஒன்றில் தோல்வி


பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் நேற்று நடந்தது. அதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் தனது பாகிஸ்தான் தெக்ரீக்- இன்சாப் கட்சி சார்பில் 4 தொகுதிகளில் போட்டியிட்டார். பஞ்சாப் மாகாணத்தின் மியான்வாலி, பெஷாவர்-1, லாகூர்-5, ராவல்பிண்டி ஆகிய 4 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்து களத்தில் இறங்கினார்.

இந்த நிலையில் நேற்று ஓட்டுபதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை நடந்தது. அதில், இம்ரான்கான் மியான்வாலி தொகுதியில் 1 லட்சத்து ஒரு ஆயிரம் ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட உபைதுல்லா ஷாதி செல் 53 ஆயிரம் வாக்குகளே பெற்றார்.

அதே போன்று பெஷாவர்-1 தொகுதியிலும் இம்ரான்கான் வெற்றி கனியை பறித்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் குலாம் அகமது பைஜர் 44 ஆயிரத்து 210 ஓட்டுகள் பெற்றார். அதே நேரத்தில் லாகூர்-5 தொகுதியில் 61 ஆயிரத்து 300 ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாகிஸ்தான் முஸ்லீம் லீக்(என்) கட்சி வேட்பாளர் சர்தார் அயாஷ் சாதிக் 71 ஆயிரத்து 420 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.

மேலும், ராவல் பிண்டி தொகுதியின் தேர்தல் முடிவுக்காக இம்ரான்கான் காத்திருக்கிறார். இங்கு இவரை எதிர்த்து பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) கட்சியை சேர்ந்த ஹனீப் அப்பாசி போட்டியிடுகிறார். பாராளுமன்ற தேர்தலில் இம்ரான்கான் கட்சிக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது. அதே நேரத்தில் கைபர் பக்துன்கவா மாகாண தேர்தலில் இவரது கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

இதற்கிடையே நவாஸ் செரீப் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சர்கோடா தொகுதியில் வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட இம்ரான்கான் கட்சி வேட்பாளரை விட 13 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்றார்.

No comments

Powered by Blogger.