Header Ads



கிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி அபுதாபி மாணவிகள் சாதனை


கிழக்கு ஆப்பிரிக்க நாடான டான்சானியாவில் உள்ளது கிளிமஞ்சாரோ சிகரம். இதன் உயரம் 5895 மீட்டர் ஆகும். கிளிமஞ்சாரோ  ஆப்பிரிக்கா கண்டத்தின் மிக உயரமான சிகரமாகும். உலக அளவில் இது நான்காவது உயரமான சிகரம் ஆகும். 

இந்த சிகரத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின், அபுதாபியில் உள்ள கலீபா பெண்கள் கல்லூரியைச் சேர்ந்த 9 மாணவிகளும், 3  ஆசிரியைகளும் ஏறி சாதனை படைத்துள்ளனர். கிளிமஞ்சாரோ சிகரத்தில் மைனஸ் 10 முதல் 20 டிகிரி வரை குளிர் நிலவும். இந்த  நடுங்கும் குளிரிலும் சிகரத்தில் 6 நாட்களில் ஏறி இவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

பெண் கல்விக்கு நிதி திரட்டுவதே இந்த பயணத்தின் நோக்கம் என்று இந்தக் குழுவினர் தெரிவித்தனர். இந்த பயணத்தின் மூலம் இந்திய மதிப்பில் 6 லட்சம் ரூபாய் நிதி திரட்டியுள்ளனர். 

ஐக்கிய அரபு எமிரேட்சை சேர்ந்த ஒரு குழு கிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி இருப்பது இதுவே முதல் முறையாகும். இந்த சாதனை பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு இக்குழு அபுதாபி திரும்பியுள்ளது.   

No comments

Powered by Blogger.