Header Ads



இலங்கை சீனாவின் மூலோபாயப் பங்காளியாக உயர்ந்துள்ளது - சீனா துணை ஜனாதிபதி

நட்பு நாடு என்ற நிலையில் இருந்து மூலோபாயப் பங்காளி என்ற நிலைக்கு இலங்கை உயர்ந்துள்ளதாக, சீனாவின் துணை அதிபர் லி யுவான்சாவோ தெரிவித்துள்ளார். 

மகிந்த ராஜபக்ச நான்கு நாள் சீனப் பயணத்தின் நிறைவாக, நேற்று சான்சி மாகாணத்தில் சீனாவின் துணை அதிபர் லி யுவான்சாவோவை சந்தித்துப் பேசினார். 

இந்தச் சந்திப்புத் தொடர்பாக கருத்து வெளியிட்ட சீனத் துணை அதிபர்,  மகிந்த ராஜபக்ச  சீன பயணமும், அவருடனான பேச்சுக்களும் மிகவும் வெற்றிகரமாக அமைந்ததாக குறிப்பிட்டார்.  உறவுகளை சீனா தொடர்ந்தும் வலுப்படுத்தும் என்றும், புதிய தளங்களில் ஒத்துழைப்புகள் விரிவாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

சீனாவின் சமபங்காளியாக இலங்கை இருப்பதாக குறிப்பிட்ட சீன துணை அதிபர், நட்பு நாடு என்ற நிலையில் இருந்து இலங்கை சீனாவின் மூலோபாயப் பங்காளி நாடாக உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.