சவுதி அரேபியாவிலுள்ள 14.000 இலங்கையர்களுக்கு தற்காலிக கடவுச் சீட்டுக்கள்
சவுதி அரேபியாவில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியிருந்தத 14 ஆயிரம் இலங்கை பணியாளர்களுக்கு நாடு திரும்புவதற்கான தற்காலிக கடவுச் சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.
சவுதி அரேபியா அரசாங்கம் அறிவித்துள்ள பொது மன்னிப்பு காலத்தை பயன்படுத்தி நாடு திரும்புவதற்கு ஏதுவாக இவர்களுக்கான தற்காலிக கடவுச் சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளதாக பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கல ரந்தெனிய சுட்டிக்காட்டியுள்ளார்.
இவர்களை விரைவில் நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவின் குடிவரவு அதிகாரிகளுடன் இணைந்து இவர்களை நாட்டுக்கு திருப்பி அழைப்பதற்கான ஏற்பாடுகளை துரிதகதியில் மேற்கொண்டு வருவதாகவும் பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் பொது மன்னிப்பு காலத்தில் நாடு திரும்பும் எதிர்பார்ப்பில் இருந்த தமக்கு இந்த சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என சவுதி அரேபிய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருசில இலங்கையர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
எவ்வித குற்றங்களும் இழைக்காத தம்மை அதிகாரிகள் பல வாரங்களாக தடுத்து வைத்துள்ளதாக தெரிவிக்கும் அவர்கள், இலங்கை தூதரக அதிகாரிகள் எவரும் தமது பிரச்சினை குறித்து ஆராய்வதற்கு முன்வரவில்லை என அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். nf

Post a Comment