விடுதலை புலிகள் தொடர்ந்தும் தீவிரவாத அமைப்புத்தான் - அமெரிக்கா அறிக்கை
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தீவிரவாதம் தொடர்பான நாடுகளின் அறிக்கையினை இன்று வெளியிட்டுள்ளது
2009இல் தமிழ்ப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட போதிலும், விடுதலைப் புலிகளின் அனைத்துலக நிதி ஆதரவு வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருவது குறித்து சிறிலங்கா கவலை கொணடுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளினது என்று குற்றம்சாட்டப்படும் நிதி அமைப்புகளை இலக்கு வைத்து பல தீவிரவாத முறியடிப்பு செயற்பாடுகளை சிறிலங்கா மேற்கொண்டுள்ளதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தீவிரவாத முறியடிப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும், அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களம், உள்நாடு பாதுகாப்புத் திணைக்களம், பாதுகாப்புத் திணைக்களம், போன்றவற்றுடன் சிறிலங்கா தனது கடல்சார் எல்லை பாதுகாப்பில் இணைந்து செயற்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த அறிக்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தொடர்ந்தும் வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்பாகவே இராஜாங்கத் திணைக்களம் பட்டியலிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Post a Comment