பௌத்த தேரர் தீக்குளித்தது ஹஜ் காலத்தில் குழப்பத்துக்கு தூபமிடும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை
கண்டியில் அண்மையில் நடைபெற்ற பிக்கு தீக்குளிப்புச் சம்பவத்தால் புனித நோன்பு, ஹஜ் பெருநாள் கடமைகளில் தாக்கங்கள் ஏற்பட்டுவிடக்கூடாது. அதில் அரசு அக்கறை செலுத்த வேண்டும். ஒவ்வொரு முறையும் ஹஜ் காலத்தில்தான் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான துரதிஸ்ட சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு நீதியமைச்சரும் மு.கா. தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். பௌத்த மேலாதிக்கவாதிகளின் அண்மைக்கால செயற்பாடுகள் மீண்டும் தலைதூக்கியிருப்பதன் பின்னணி குறித்து அரசு கூடுதல் கவனம் செலுத்தவேண்டிய தேவை இருக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
கண்டியில் பிக்கு ஒருவர் தீக்குளித்த சம்பவத்தையடுத்து பௌத்த பிக்குகள் ஒருசிலரால், முஸ்லிம் பிரதேசங்கள் பலவற்றிலுள்ள இறைச்சிக்கடைகளுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் குறித்து அவர் கருத்துத் தெரிவித்தபோதே இவ்வாறு கூறினார்.
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது,
அரசை நெருக்கடிக்குள் தள்ளுவதற்காக இப்போது எடுக்கப்படும் பல முயற்சிகளில் ஒன்றாகத்தான் கண்டியில் நடைபெற்ற சம்பவத்தைப் பார்க்கவேண்டியுள்ளது. ஒவ்வொரு முறையும் ஹஜ் காலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் வந்தவண்ணம் உள்ளன. எனினும் நாங்கள் மிகவும் நிதானமாக இந்த விடயங்களைக் கையாளவேண்டியுள்ளது.
ஹஜ் பெருநாள் காலத்தில் முஸ்லிம்கள் உழ்ஹிய்யா கொடுப்பது தொடர்பில் நாங்கள் கவனத்தைச் செலுத்தியுள்ளோம். அதில் எதுவித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. இதுகுறித்து உயர்மட்டத் தரப்புகளின் கவனத்துக்கு கொண்டு செல்கிறோம் என்றார்.

His worry over the goverment.... and not to defend muslims rights during Harj !!! Don't worry... the goverment will not topple... but no doubt that you and your party will suffer a sudden downfall....very soon.
ReplyDeleteithu werum pechchalavil irunthuwida koodathu. Neengal unnmaya irukkawendum antha neraththil olinthu wida wendaam.ok,
ReplyDeleteஅரசாங்கத்தின் பங்காளி கட்சியின் தலைவர் என்று சொல்லும் நீங்கள் (ரவ்பு ) தான் சார்ந்த சமுகத்திற்கு ஏற்பட்டிருக்கும் மற்றும் ஏற்படப்போகும் பிரச்சினைகள் குறித்து கையாளுகின்ற அல்லது பதிலளிக்கின்ற விதத்தைப்பார்த்தால், மூன்றான்னிளைக்கட்சிகளின் முக்கியஸ்தர்களான ஆசாத் சாலி,மௌலவி முபாரக் அப்துல் மஜீத், மனோகணேஷன் போன்றோர்கள் அரசிடம் விடயங்களை முன்வைக்கும் விதத்தை ஒத்ததாக உள்ளது. இல்லை அதை விட மோசமாக உள்ளது. இதற்காக பிறர்முன் வெட்கி தலைகுனிய வேண்டிஉள்ளது.
ReplyDeleteஇதற்காகவா மக்கள் உங்கள் கட்சியை நம்பி வாக்களித்தது? வடக்கில் நடக்க இருக்கும் தேர்தலுக்காகவே உங்கள் வாய் திறக்கப்படுவது எங்களுக்கு புரிகிறது.
வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து அரசியல் அனாதைகளான முஸ்லிம் மக்களுக்கு மர்ஹும் அஷ்ரப், மர்ஹும் மசூர் மற்றும் ரிஷாத் பதியுதீன் போன்றோர் செய்த சேவைகளை உங்களால் செய்ய அறவே முடியாது.
அவர்களின் பணி தொடர உங்களது பங்களிப்பை செய்யுங்கள்.
அத்துடன் உங்கள் கட்சியை நம்பி வாக்களித்த மக்களை ஏமாற்றாதீர்கள்.
Statements will not help; there should be some action to be taken. We know all your statements are to satisfy the Muslims not to solve the problems. You always give preference for your position in the government and personal benefits.
ReplyDeleteDon’t you think that your long term leadership provided zero or negative benefits to the community? If you feel that you can’t do anything for the benefits of the Muslims’ leave the leadership for someone who can fight for our rights. If SLMC feel that they can’t do anything, dissolve the party, and then the Muslims can get there problems solved by the major political parties by voting for them.
Our votes are wasted by SLMC by diluting them for nothing. Other major parties are blaming Muslims for not voting for them, therefore they least concern to fight for our rights.
don't play with the life of the Muslim community.
ungallal enne mudiyum pongaiyya neenglum unga arasiyelum
ReplyDeletemadathanamana comments hali ninathu kawalipadukirom ean enral comments panra neenka enna awar seanja nallam intha kattathila awar eppadi nadanthu kolla weandum enpatha solranka illa please thearinjawanka padichchawanka sollunka
ReplyDeleteMr. Rauff the Hon. Minister of Justice, your tone sounds like "give me a chance once more then I would be able to voice over the Haj Uluhiya" Hilarious! Where do you think innocent voters are being led to? Please, please, at least for a moment be honest and avoid double standard. Let the voters leave their grievances to almighty Allah exactly the way things are turning around; No Muslim Politicians even bother to care about the right of every individual.
ReplyDeleteTamil's voice is heard loud and clear all over the world including at the UN. Sadly, on the contrary, the burning issues of the Muslims are always being attempted by unscrupulous Muslim politicos to sweep under carpet, perhaps, for perks? This is a dire situation.
Once again, think of the Ummah in light of the Teachings of the Prophet Muhammad(SAW). Misleading the innocent and depriving of their privileges will boomerang on you, in other words, "what goes around comes around" Think for instance, your family members, relatives and so on, they too will have to pay the price on the judgement day against any injustices you may commit on the Ummah
உங்கள் கருத்து உழ்ஹிய்யாவுக்கு மடடும் அறுக்க அனுமதி எடுத்துக் கொண்டு மற்ற நேரங்களில் தடைச் சட்டத்தை கொண்டுவர அரசாங்கத்துக்கு ஆலோசனை கொடுப்பதா? வேண்டவே வேண்டாம். இது விடயத்தில் நீங்கள் மௌனமாக இருப்பதே நல்லது.
ReplyDelete