Header Ads



அரசாங்கத்திற்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு - ஆஸாத் சாலி

(Un) இலங்கையில் தான் பாதுகாப்பாக வாழமுடியாது என கொழும்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி முதல்வரும், முஸ்லிம் தமிழ் தேசிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலி,  தெரிவித்துள்ளார்.

அண்மையில் அமெரிக்க தூதுவருக்கும் அசாத்சாலிக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. அதன் போதே இலங்கையில் தான் வாழ்வதற்கு பாதுகாப்பு இல்லை என அமெரிக்க தூதரிடம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும், அரசாங்கம் தமக்கு உரிய பாதுகாப்பை வழங்க தவறிவிட்டதாகவும் இந்த விடயம் தொடர்பில் இஸ்லாமிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து, மேலும் இரண்டு அடிப்படை மனித உரிமை மீறல் வழக்குகளை தாக்கல் செய்யவிருப்பதாகவும் அவர் அமெரிக்க தூதரிடம் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் இருந்து வெளிவரும்  சஞ்சிகை ஒன்றிற்கு கருத்துத் தெரிவித்திருந்தமை தொடர்பில் அண்மையில் அசாத்சாலி கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


2 comments:

  1. Mr. Aashath Shaly Nienkal Aan PPS Athiraka Valakku Thodukka Mudiyatha.................?
    Muslimkalukku Athierak PPS Poiyan Kuttrachsaddukkal Kandyeel (Kandy) Pasi Erukkarkal Ennoom Aaralam Ethai Aatharathudan Courts Nierupikka mudieum Thana (Ethai Jammiyathu Ulamakkal Seivarkal Enru Ethierparthom Avarkal Ceylon Muslimkalai Nadattriel Veettu Veeddarkal Ethu Ulakam Arientha Unmai)
    =================Kalmunai Mohamed Fowse)=================

    ReplyDelete
  2. தனக்கு பாதுகாப்பு போதாது என்று சொல்லி அடிப்படை மீறல் வழக்கு தாக்கல் செய்ய இருக்கும் நீங்கள் ஏன் 10 பழ்ழி உடைப்பு நடந்த பிறகும் அது பற்றி ஒரு வழக்குக்கூட நீங்கள் தாக்கல் செய்ய வில்லை??? அதற்குரிய எல்லா ஆதாரங்களும் உங்களிடம் உள்ளதுதானே.... ஏன் அதை நீங்கள் செய்யவில்லை?
    மாறாக, உங்க பாதுகாப்புத்தான் தற்போது சமூகத்துக்கு அவசியம். தான் என்பதை மாத்திரம் நிலை நிறுத்த முயற்சி செய்யுங்கள்..... அதுவே உங்க தேவையும்.....
    தமிழ் தேசிய கூட்டணி என்பது LTTE இனரால் அக்கீகரிக்கப்பட்ட ஒரு மறைமுக புலி என்பது உங்களுக்கு தெரியாது போய்விட்டதே? அப்பாவி அரசியல் பேசுகின்றீர்கள்.
    தமிழ்தேசிய கூடமைப்பு பற்றி பேசுகின்றீர்கள். ஆனால் அவர்களோ, வட கிழக்கில் முஸ்லிம்களுக்கு மறைமுக எதிரியாகத்தானே இன்றும் உள்ளார்கள். அது பற்றி நீங்கள் கண்டுகொள்ளவில்லயா? அல்லது உங்களுக்கு டீப் அரசியல் தெரியாதா?
    ஒற்றுமையான சமூகம், சமூகம் என்று பேசும் நீங்கள், உங்கள் மேடையில் அமர வேறு ஒரு முஸ்லிம் தலைவர்களோ, உலமாக்களோ, அறிஜர்களோ உங்களுக்கு அறிமுகம் இல்லையா? அல்லது அவ்வாறானவர்களை சேர்த்துக்கொண்டால் அவர்கள் உங்களை அடையாளம் காட்டிவிடுவார்கள் அல்லது முந்திவிடுவார்கள் என்ற ஐயமா?
    அர்த்தமற்ற, குறிக்கோள் இல்லாத வெறும் உணர்ச்சிக்கும், தூர நோக்கற்ற ஆவேச பேச்சுக்கும் பின்னால் நம் சமூகம் இன்னும் துணை போகக் கூடாது.

    ReplyDelete

Powered by Blogger.