கலாபூஷணம் மு. பஷீரின் 'இது நித்தியம்' (படங்கள்)
(ஏ.சீ.எம். றியால்)
கலாபூஷணம் மு. பஷீரின் எழுதிய இது நித்தியம் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா மினுவாங்கொடை கலை இலக்கிய வட்டத்தின் ஆதரவில் வைத்திய கலாநிதி கலாபூஷணம் ஏ.கே. தாஸிம் அகமது அவர்களின் தலைமையில் நேற்று (04.05.2013) அன்று மினுவாங்கொடை கல்லொளுவை அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இலக்கிய வட்ட செயலாளரும் பிரபல ஊடகவியலாளருமான கலாபூஷணம் எம்.ஏ.எம். நிலாம் அவர்களால் வரவேற்புரையாற்றப்பட்டது. மேலும் இவ் விழாவுக்கு பிரதம அதிதியாக நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமாகிய றவூப் ஹக்கீம் அவர்களால் உரையாற்றப்படுவதையும். கௌரவ அதிதியாக கலந்து கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அங்கத்துவம் மற்றும் கிளைகளுக்கான தேசிய பணிப்பாளரும், அம்பாறை மாவட்ட பொருளாளருமாகிய எ.சீ. யஹியாகான், அல்ஹாஜ் எஸ்.எல்.எம். ஹனிபா, புரவலர் அல்ஹாஜ் பாயிக் மக்கீன், பேராதனை பல்கலைக்கழக கலாநிதி எம்.எஸ்.எம்.அனஸ், கல்லொளுவை ஜூம்மா பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் எம்.எச்.எம்.முனாஸ் மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் சாபி றஹீம் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
மேலும் முதற்பிரதியினை கௌரவ அதிதியாக கலந்து கொண்ட எ.சீ. யஹியாகான் மற்றும், புரவலர் அல்ஹாஜ் பாயிக் மக்கீன் ஆகியோர்கள் இணைந்து பெறுவதையும் காணலாம்.



Post a Comment