'சமூக மயமாக்களில் இறை பணியாளர்களின் பொறுப்பும் கடமையும்' - காத்தான்குடியில் கருத்தரங்கு
(பழுளுல்லாஹ் பர்ஹான்)
'சமூக மயமாக்களில் இறை பணியாளர்களின் பொறுப்பும் கடமையும்' எனும் தலைப்பிலான கருத்தரங்கு இன்று 01-05-2013 (புதன்கிழமை) காலை 8.30 மணிக்க புதிய காத்தான்குடி-1 பத்ரியா ஜும்மா பள்ளிவாயலில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் தலைவர் மௌலவி ஆதம்லெப்பை(பலாஹி) தலைமையில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் வளவாளர்களாக அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் அன்சார் பழீல் (நளீமி) உள்ளிட்ட பல விரிவுரையாளர்கள் கலந்து சிறப்பு விரிவுரைகளையும் செய்தனர்.
இறை பணியாளர்களை உள்ளடக்கிய கூட்டமைப்பும் இதன்போது அங்குரார்ப்பணம் செயது வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் செயலாளரும் ஊடகவியலாளருமான மௌலவி எஸ்.எம்.முஸ்தபா (பலாஹி), காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் உப செயலாளர் மௌலவி எம்.ஏ.எம்.மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி),காத்தான்குடி ஜம்மியதுல் உலமாத் தலைவர் மௌலவி அலியார்(பலாஹி),கதீப்மார்கள்கள்,பள்ளிவாயல் இமாம்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த கருத்தரங்கு பெறுமாறு காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் செயலாளரும் ஊடகவியலாளருமான மௌலவி எஸ்.எம்.முஸ்தபா பலாஹியின் ஒருங்கிணைப்பின் கீழ் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment