யாழ்ப்பாண முஸ்லீம் முன்பள்ளி பாடசாலைகளுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகம்
(பாறூக் சிகான்)
யாழ் மாவட்ட முஸ்லீம் முன்பள்ளி பாடசாலைகளுக்கு ஹிரா பௌண்டேஷன் அமைப்பு பாடப்புத்தகங்களை யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியில் இன்று (25.5.2013) மாலை 4.30 மணியளவில் வழங்கிவைத்தது.
இதில் அல்ஹதிஜா ,அல்அஸ்ஹர் முன்பள்ளி மாணவர்கள் 70பேருக்கு பாடப்புத்தகங்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் ,அவர்களை கற்பித்த ஆசிரியர்களுக்கும் அன்பளிப்புகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த ஹிரா பௌண்டேஷன் ஸ்தாபகர் அமீன் ஹாஜியார் ஒரு சமூகம் முன்னேற்றம் அடைய அடிப்படையாக அமைவது கல்வி,அதனை பெற்றோர்கள்,ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சிறந்த முறையில் அவர்களுக்கு ஊட்டவேண்டும்,மேலும் கல்வி கற்பதனால் எவ்வேளையிலும்,எந்த நிலையிலும் கூட நிலைத்து நின்று முன்னுக்கு வரமுடியும்,என்றார்.
ஹிரா பௌண்டேஷனின் 3ம் வருட நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் அல்அஸ்ஹர் முன்பள்ளி ஸ்தாபகர் கே.எம் நிலாம்,யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளன தலைவர் எம் ஜமால்,செயலாளர் எம்.ஏ சுவர்ஹான் மற்றும் சம்மேளனத்தின் உப செயலாளர் ஏ.எல் லாபீர்,உதவும் கரங்கள் தலைவர் எம்.இர்பான் உட்பட் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.



இந்த முயற்சி சிறப்பானது, ஹிறா நிறுவனத்தின் இவ்வாறான ஒத்துழைப்புகள் யாழ் முஸ்லிம் சமூகத்தின் கல்வி மறுமலர்ச்சிக்கு வித்திடும் என்பதில் எமக்கு பூரண நம்பிக்கை இருக்கின்றது. இவர்களின் பணி தொடர நாம் அல்லாஹ்வைப் பிரார்த்திப்போம்.
ReplyDeleteஅஸ்மின் அய்யூப்
ஹிரா அமைப்பு மென்மேலும் வளர அல்லாஹ்வை பிரார்த்திப்போமாக...........
ReplyDeleteஆமீன்..............