Header Ads



வாழைச்சேனை முஹம்மது றிழா எழுதிய 'முரண்பாடுகளைகையாளுதல்


(அனா)

வாழைச்சேனை முஹம்மது றிழா எழுதி மாற்றுவெளி பதிப்பகத்தின் வெளியீடாக  'முரண்பாடுகளைகையாளுதல்' எனும் நூல் வெளியீட்டுவிழா இன்று (25.05.2013) மாலை ஓட்டமாவடி பாத்திமாபாலிகா மகாவித்தியாலயத்தில் இடம் பெற்றது.

கவிஞரும் ஓவியருமான எஸ்.நளீம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கௌரவ உரையினை மூத்த எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா நிகழ்த்தியதுடன் உரைகள் எனும் தலைப்பில் நவமணி பிரதம ஆசிரியர் என்.எம்.அமீன், மீள்பார்வை ஆசிரியர் சிராஜ் மஷ்ஹூர், பொறியியலாளர் எம்.எம்.பளுல்ஹக், கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.ரீ.எம்.றிஸ்வி, கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.சேகுஅலி ஆகியோர் வழங்கியதுடன் நூல் மதிப்பீட்டுரையை எழுத்தாளர் ஏ.ஆர்.பர்சான் நடாத்தியதுடன் ஏற்புரையை நூலாசிரியர் முஹம்மது றிழாவும் நடாத்தினார்.

இந் நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஏ.நிலாம், மூத்த எழுத்தாளர் கலைவாதி கலீல், எழுத்தாளர் ஆத்து கவி அன்புடீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.





No comments

Powered by Blogger.