Header Ads



அட்டாளைச்சேனை கல்விக் கோட்ட சாரணர் பயிற்சி பாசறை


(ரீ.கே. றஹ்மத்துல்லா)

அக்கரைப்பற்று, கல்முனை மாவட்ட சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்திற்குட்பட்ட ஆலம்குளம் றகுமானியா வித்தியாலயத்தில் நடைபெற்ற மூன்று நாள் சாரணர் பயிற்சி பாசறையின் இறுதிநாள் நிகழ்வு 26-05-2013 நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீhப்பாசன அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை கலந்து சிறப்பித்ததுடன் கௌரவ அதிதிகளாக ஓய்வு பெற்ற உதவிக் கல்விப்பணிப்பாளர்களான யூ.எல்.எம். வாஹிட், எஸ்.எல் றஸாக் மற்றும் பாடசாலை அதிபர் ஏ.எல். முஸம்மில், பிரதி அதிபர் ஜாபீர், மாவட்ட சாரணர் ஆணையாளர் ஐ.எல்எம். மஜீட், ஓய்வு பெற்ற மாவட்ட சாரணர் ஆiணையாளரும், விரிவுரையாளருமான எம்.ஐ.எம். முஸ்தபா, ஆசரியர் என்.எம். சகுறுதீன், இளைஞர் பாராளுமன்றத்தின் தவிசாளர் யூ.எல்.எம். சபீர் உள்ளிட்ட அதிதிகள் சாரண மாணவர்களினால் வரவேற்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதன் போது திறமைகளை வெளிக் கொணர்ந்த மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அதிதிகளினால் சான்றிதழும், நினைவுப்பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப் பட்டனர்.

இப்பாடசாலையில் முதலுதவி மற்றும் சாரணப்பிரிவுக்காக மாணவிகள் தெரிவு செய்யபட்டு அவர்களுக்கான விசேட பயிற்சிகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் அம்பாறை மாவட்ட இளைஞர் சாரணர் பிரிவின் தலைவராக இளைஞர் பாராளுமன்றத்தின் தவிசாளர் சபீர் மாவட்ட சாரணர் ஆணையாளரினால் சின்னம் சூட்டப்பட்டு சத்தியப் பிரமானமும் செய்து கொண்டார்.




1 comment:

  1. Try and leave this better than you found it.......................

    Joint Scouting for Better understanding........

    By : Naajith
    From : Maruthamnai..........

    ReplyDelete

Powered by Blogger.