Header Ads



பிஸ்மி அல்குர் ஆன் பாடசாலையின் 3மூன்றாவது சான்றிதழ் வழங்கும் நிகழ்வு (படங்கள்)


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு-காத்தான்குடி பிஸ்மி அல் குர் ஆன் பாடசாலையின் 3 மூன்றாவது சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் பிஸ்மி அல் குர் ஆன் பாடசாலையின் பணிப்பாளர் அஷ்ஷேய்க் எம்.பி.எம்.பிர்தௌஸ் நளீமி தலைமையில் இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உப செயலாளரும் விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான எம்.பி.எம்.பைறூஸின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இவ் விழாவில் பிரதம அதிதியாக சிறுவர் வைத்திய நிபுணர் டாக்டர் முஸ்தபா றயீஸ் ,கௌரவ அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் முஸ்லிம் கவுன்சில் ஆகியவற்றின் தலைவர் என்.எம். அமீன், மற்றும் உலமாக்கள்,ஊர் பிரமுகர்கள் ,பெற்றோர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

சிறுவர்களை அல்குர்ஆனின் நிழலில் பயிற்றுவிக்க வேண்டியதன் அவசியம்' எனும் தலைப்பில் டாக்டர் முஸ்தபா ரயீஸ் சிறப்புரையாற்றினார்.

இங்கு மாணவ மாணவிகளில் ஆற்றல்களை வெளிக்கொணரும் தேசிய கீதம்,சிறுவர் பட்டி மன்றம்,கஸீதா,ஸீறதுர் ரஸூல்,அல் குர் ஆன் மாநாடு போன்ற பல்வேறு விதமான இஸ்லாமிய கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.