குவைத் இக்ரஃ இஸ்லாமிய சங்க (IIC) மாணவர்களுக்கான ஒருநாள் பயிற்சி
குவைத்தில் கடந்த இருபது வருடங்களாக சமூகப்பணி புரிந்துவரும் இக்ரஃ இஸ்லாமிய சங்கம் (IIC) கடந்த வாரம் மாணவர்களுக்கான ஒருநாள் பயிற்சி நிகழ்வை வெற்றிகரமாக நடாத்தியது.அங்கு "கற்றல் வழிமுறையாக MIND MAP என்ற தலைப்பில் அஷ் ஷெய்க் U .K .றமீஸ் நளீமி M .A பயிற்சிகளை வழங்கினார்.மேலும் குவைத் பல்கலைகழக பட்டதாரிகளான அஷ் ஷெய்க் M .N .M .ரம்சான் ,அஷ் ஷெய்க் M .ஷீராஸ் ஆகியோர் செயல்பாடுகள் (ACTIVITIES) மூலம் பயிற்சிகளை மேற்கொண்டனர். சகோதரர் M .சஜாத் கருத்துரை வழங்கினார். இக்ரஃ இஸ்லாமிய சங்கத்தின் தலைவர் அஷ் ஷெய்க் M .R .M. முனாஸ் சங்கத்தின் செயல்பாடுகள் தொடர்பாக கருத்து தெரிவித்ததுடன் நன்றியுரையும் வழங்கினார். மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்றதுடன் இதுபோன்ற நிகழ்வுகளை மேலும் ஏற்பாடு செய்யுமாறு வேண்டிக்கொண்டனர்

Post a Comment