Header Ads



'சமுர்த்தி உத்தியோகத்தர்களாக முஸ்லிம்கள் நியமனம் பெற்றிருப்பது நம்பிக்கையளிக்கிறது'

சமுர்த்தி கள உத்தியோகத்தர் நியமனம்- முஸ்லிம்கள் நியமனம் பெற்றிருப்பது நம்பிக்கையளிக்கின்றது- யாழ் மாநகர பிரதி மேயர் எம்.எம்.எம்.றமீஸ் (சட்டத்தரணி)

நாளை 01-06-2013 அன்று வழங்கப்பட இருக்கின்ற சமுர்த்தி கள உத்தியோகத்தர் நியமனத்தில் முஸ்லிம்கள் இணைக்கப்பட்டிருப்பது நம்பிக்கையளிக்கின்றது என யாழ் மாநகர சபையின் பிரதி முதல்வர் சட்டத்தரணி றமீஸ் அவர்கள் யாழ் முஸ்லிம் இணையத்திற்கு தெரிவித்தார். அவருடன் மேற்கொள்ளப்பட்ட பிரத்தியேக உரையாடலின் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

30-05-2013 அன்று யாழ் மாநகர சபை அமர்வின்போது “யாழ் சமுர்த்தி கள உத்தியோகத்தர்கள் நியமனத்தில் முஸ்லிம்கள் புறக்கணிப்பு” என்ற செய்தி முன்வைக்கப்பட்டது. மாநகர சபை அதிகாரங்களுக்கு அப்பாற்பட்ட விடயமொன்று சபையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவது பொறுத்தமானதல்ல என்பதால் குறித்த விடயம் தொடர்பில் நான் எவ்வித கருத்துக்களையும் சபையில் முன்வைக்கவில்லை.

பின்னர் ஈ.பி.டி.பி யாழ் மாவட்ட அமைப்பாளர் தோழர் கமல் அவர்களுடன் தொடர்பினை ஏற்படுத்து மேற்படி விடயம் குறித்து அறிந்துகொண்டேன். அதன் பின்னர் அமைச்சர் றிஷாட் அவர்களின் கவனத்திற்கும் அமைச்சர் டக்ளஸ் அவர்களின் கவனத்திற்கும் உரிய விடயம் கொண்டுவரப்பட்டது. அதனைத் தொடர்ந்து தோழர் கமல், துரிதமாக செயற்பட்டு, அமைச்சர்களுடைய ஒத்துழைப்புடனும் அங்கீகாரத்துடனும் குறித்த நியமனத்தில் முஸ்லிம்கள் இணைத்துக்கொள்ளப்படுவதை உறுது செய்தார். அந்தவகையில் மேற்படி விடயத்தில் நேரடியாக கவனம் செலுத்திய அமைச்சர் றிஷாத் பதியுத்தீன் அவர்களுக்கும், அமைச்சர் டகளஸ் தேவானந்தா அவர்களுக்கும், யாழ் மாவட்ட அமைப்பாளர் தோழர் கமல் அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கின்றோம். 

இவ்வாறான ஒத்துழைப்புகள் எதிர்காலத்திலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயக முன்னணியுடன் இணைந்து செயலாற்றுவதற்கு உறுதுணையாக இருக்கும் எனவும் நம்புகின்றோம்
என்று தெரிவித்தார்

No comments

Powered by Blogger.