Header Ads



புத்தர் சிலை நிர்மாணிப்பதற்கு நீதிமன்றத்தினால் தடைவிதிப்பு

மட்டக்களப்பு நகரின் வடக்கு நுழைவாயிலில் பிள்ளையாரடி சந்தியில் புத்தர் சிலை நிர்மாணிப்பதற்கு நீதிமன்றத்தினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் சிலை வைப்பதற்கு மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதியின் வேண்டுகோளின் பேரில் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளரினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உள்ளுர் மக்கள் எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு, இதற்கான நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும் கோரினார்கள்.

குறித்த ஆர்பாட்டம் தொடர்பாக காவல்துறை மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சமர்பித்த அறிக்கையில் குறித்த இடத்தில் புத்தர் சிலை வைப்பது பொதுத் தொல்லை ஏற்படுத்தும் என குறிப்பிட்டு அதற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரினர். 

காவல் துறையின் அறிக்கையை ஏற்றுக் கொண்ட மஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி என். எம். எம். அப்துல்லாஹ், சிலை வைப்பதற்து தடை உத்தரவை பிறப்பித்ததோடு அதற்கான வேலைகளையும் நிறுத்துமாறு தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். 

5 comments:

  1. அழ்ழாஹு அக்பர்!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  2. அப்ப பெளத்த நாடு பெளத்த நாடென்று சொல்லிக்கொண்டிருக்கின்றார்களே சட்டத்தைப்பார்த்தீர்களா?

    கிண்ணியாவில் வைத்தியசாலையில் நடக்கும் கொடுமைகளுக்கெதிராக ஏழைமக்களுக்கு நடக்கும் அக்கிரமங்களுக்கெதிராக குரல் கொடுத்து நியாயம் கேட்க யாருமில்லையா? பார்த்திர்களா அந்தச்செய்தியை இல்லையானால் பாருங்கள் ஜப்னா முஸ்லிம் செய்தி தலைப்பு: ”இப்படியானதொரு கஸ்டம் யாருக்கும் வரக்கூடாது” பார்த்துவிட்டு உங்களால் முடிந்த முயற்சிகளைச்செய்யுங்கள் இழைஞர்களே இது போன்ற தவறுகளெ விட்டு வைக்காதிர்கள்.....

    ReplyDelete
  3. மஜிஸ்ட்ரேட் நீதிபதி தடை வழங்கினாலும் மேன் முறையீடு உள்ளது ...சிறுபான்மை இன நீதிபதியின் தீர்ப்பு ஓரம் கட்டப்படலாம்....???

    ReplyDelete
  4. Mr. Ranees,

    This is only the first scene of the drama. Please wait & see the rest of them.

    ReplyDelete

Powered by Blogger.