மனோ கணேசனின் பேஸ்புக்கிலிருந்து..!
<<< நான் ஒரு நாடோடி தமிழன். கொழும்பு என்பது என்னை போன்ற நாடோடி தமிழர்களின் மாநகரம் >>>
நண்பர் அசாத் சாலி சம்பந்தமாக, நேற்றைய போராட்டத்தின் போது நான் ஆற்றிய உரை "ஹலால் உணவு வேண்டும் என்றால் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்று சொல்வது இனத்துவேஷம் இல்லையா?" என்ற தலைப்பில் தமிழ்வின் இணையத்தில் வந்துள்ளது.
அதற்கு பின்வருமாறு ஒரு TW வாசக நண்பர் கருத்து தெரிவித்துள்ளார்.
"மனோ அண்ணா, நீங்க இந்த முஸ்லிம் அரசியல் வாதிகள் பின்னால் போகாமல் தமிழனுக்கு எதுவும் பெற்றுக்கொடுக்க முடியுமா என்று பாருங்கள். முஸ்லிம் அரசியல்வாதிகள், சந்தர்ப்பவாதிகள். பணத்துக்கும், பதவிக்கும், காட்டியும், கூட்டியும் கொடுப்பதுதான் அவர்கள் தொழில்"
நண்பர் ஒரு உணர்வு வேகத்தில் சொல்லியுள்ளார்.
முதலில் ஒன்று, நான் இன்று உயிருடன் வாழும் எந்த ஒரு மனிதரின் பின்னாலும் போகவில்லை. நேர்மை, அர்ப்பணிப்பு, தூரப்பார்வை, தேடல், துணிச்சல் என்ற கொள்கைகளின் அடிப்படையில் வரலாறு என்னை வழி நடத்துகிறது. நான் பயணிக்கிறேன், அவ்வளவுதான்.
"சந்தர்ப்பவாதம், பணத்துக்கும், பதவிக்கும் விலை போவது" என்ற குணாதிசயங்கள் என்ன, தமிழ் சமூகத்தில் இல்லையா? அட, என் கட்சியிலே, என் குடும்பத்திலேயே, என் பக்கத்தில் இருந்தவர்களாலேயே இவை முன்னின்று நடத்தப்பட்டு என் முதுகில் குத்தப்பட்டதே!
"காட்டியும், கூட்டியும்" என்ற சொற்பிரயோகங்களை கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், இவை பலமுறை கேட்டு சலித்துப்போன அரசியல் கெட்ட வார்த்தைகள்தான்.
எனக்கு சரி என்று படுவதை சொல்வதிலும், செய்வதிலும் நான் பின் நிற்பதில்லை. எனக்கு அநீதி என்று படுவதை எதிர்க்க நான் ஒருபோதும் பின் நிற்பதில்லை.
அந்த அடிப்படையில்தான் நான் தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற பேதங்கள் இல்லாமல் அநீதி எங்கு இழைக்கப்படுகிறதோ அங்கெல்லாம் நமது குரலும், செயலும் தென்பட செய்கிறேன். நான் ஒரு தமிழன் என்ற காரணத்தால், தமிழர் விவகாரங்களை அதிகமாக என்னை வந்து சேர்கின்றன. அவ்வளவுதான்.
அரசியல்வாதிகளுக்கு மக்கள் ஆதரவு என்பது தேர்தல் மூலமாகத்தான் அடையாளப்படுத்தப்படும். இன்று நான் முஸ்லிம் மக்கள் தொடர்பில் குரல் கொடுப்பது எதிர்கால தேர்தல்களில் அவர்களது வாக்குகளை பெற அல்ல.
தேர்தல் ஒன்று நடந்தால் இங்கே கொழும்பில் கூட முஸ்லிம் வாக்காளர்கள் எனக்கு வாக்களிப்பதில்லை. கடந்த தேர்தல்களில் எப்போதும் முஸ்லிம்கள் தங்கள் இன வேட்பாளர்களுக்குதான் வாக்களித்தார்கள். இது சரியானது. இது தப்பு அல்ல. ஆனால் மேலதிகமாக ஒரு விருப்பு வாக்கு இருந்த வேளையிலும்கூட, முஸ்லிம்கள் அதை எனக்கு அளிப்பதை விட, ஒரு சிங்கள அரசியல்வாதிக்குதான் அளித்தார்கள். இதுவும் எனக்கு நன்கு தெரியும்.
எதிர்காலத்திலும் கொழும்பில் முஸ்லிம் மக்கள் மனோ கணேசனுக்கு வாக்களிப்பார்கள் என நான் முட்டாள்தனமாக எதிர்பார்க்கவில்லை. தங்கள் இனத்தவர்களுக்கு அளித்துவிட்டு, மேலதிக விருப்பு வாக்கு இருந்தால் அதை ஒரு சிங்கள வேட்பாளருக்கு அளித்தாலும் ஆச்சரியமில்லை.
எனவே அந்த எதிர்பார்ப்பில் நான் பணியாற்றவில்லை. முஸ்லிம் சகோதர்களின் துன்பங்கள் தொடர்பில் நான் குரல் கொடுப்பதும், போராடுவதும், வாக்கு சீட்டு வியாபாரம் அல்ல.
இன்னும் சொல்லப்போனால், நான் கொழும்பில் இருந்தப்படி வடக்கு-கிழக்கு தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறேன். கடந்த போர்காலத்தில் இருந்து போராட்டங்களை முன்னெடுத்து, பங்களித்து வருகிறேன்.
சிலர் என்னை வடக்கு, கிழக்கு தமிழர்களுக்காக குரல் எழுப்பி போராடுவதை நிறுத்திவிட்டு கொழும்பை மாத்திரம் பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் சொல்கிறார்கள். இன்னும் சிலர் மலையகத்தை மாற்ற முடியாது. தோட்ட தொழிலாளர்களை பற்றி பேசி, போராடி நேரத்தை வீணடிக்காதீர்கள் என்றும் சொல்கிறார்கள்.
ஏன் சிங்களத்தில் பேசுகிறீர்கள்? சிங்கள மக்கள் தொடர்பான தேசிய பிரச்சினைகளில் அக்கறை காட்டாதீர்கள். சிங்கள கட்சிகளுடன் எந்த ஒரு உறவையும் வைத்து கொள்ளாதீர்கள் என்று சொல்லும் தீவிர தமிழ்வாதிகளும் உள்ளனர்.
இவை எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு மனதுக்குள் சிரித்துக்கொண்டு அமைதியாக இருக்க கற்று கொண்டுள்ளேன்.
இன்று எனக்கு வரலாறு ரொம்பவும் முதிர்ச்சியை கற்று கொடுத்துள்ளது. என் உள்ளமும், உடலும் இளமையாக இருக்கின்ற வேளையிலே அறிவில் முதிர்ச்சி ஏற்பட்டுள்ளதை உணர்கிறேன். அநியாயத்தை கண்டால்தான் எனக்கு கோபம் வருகிறது. தனிப்பட்ட காரணங்களால் எனக்கு கோபம் வருவதில்லை. என் வாழ்க்கையில் எனக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்தவர்களுக்குதான் நான் இதற்காக நன்றி சொல்ல வேண்டும்.
வட-கிழக்கு தொடர்பாக தொடர்ந்து பேசி, போராடி வருவதால்,வடக்கிலும், கிழக்கிலும் வாழும் தமிழ் மக்கள் என் மீது அன்பு கொண்டுள்ளார்கள். அங்குள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தமிழ் இளைஞர்கள் என்மீது பாசம் வைத்துள்ளார்கள். இது எனக்கு தெரியும்.
ஆனால், இதை நம்பி நான் நாளை யாழ்ப்பாணத்துக்கோ, வன்னிக்கோ சென்று தேர்தலில் போட்டியிட முடியுமா? அங்கு சென்று வாக்கு கோர முடியுமா? அப்படி சென்றாலும் அங்கு வாழும் தமிழர்கள் எனக்கு வாக்களிப்பார்கள் என நான் நம்பவில்லை. வாக்கு என்று வந்துவிட்டால், அவரவர்கள் தங்கள் ஊரான் என்றும், தங்கள் ஆள் என்றும் பார்ப்பது வழக்கம்.
தேர்தல் என்று வந்துவிட்டால், மலையகத்தில் என்னை அந்நியன் என்று பார்க்கும்போது, வடக்கில் தமிழர்களும், அதன் பிறகு முஸ்லிம்களும் என்னை அந்நியன் என்று பார்ப்பது அதிசயம் அல்ல.
ஆகவே நான் குரல் கொடுக்கின்றேன், போராடுகின்றேன் என்பதற்காக, வடக்கிலும், கிழக்கிலும், மலையகத்திலும் தமிழர்களும், முஸ்லிம்களும் எனக்கு ஒருபோதும் வாக்களிக்க போவதில்லை. அந்த எதிர்பார்ப்பும் எனக்கு இல்லை.
எதிர்பார்ப்பு இருந்தால்தானே பிரச்சினை ?
நான் ஒரு நாடோடி தமிழன். கொழும்பு என்பது என்னை போன்ற நாடோடி தமிழர்களின் மாநகரம். ஆகவேதான் தேர்தல் என்று வந்துவிட்டால், கொழும்பில் வாழும் தமிழர்களை விட இனி எவரையும் நான் நம்ப போவது இல்லை. அரசியலில் நீண்ட காலம் நான் நீடித்திருக்கவும் போவது இல்லை.
ஆகவே நான் வடக்கு, கிழக்கு, மலையக தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பாக குரல் எழுப்புவதும், போராடுவதும் தேர்தல் நோக்கில் அல்ல.
எனவே முஸ்லிம் மக்களுக்கும், வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கும், மலையக தமிழ் மக்களுக்கும் குரல் கொடுக்காதீர்கள் என்ற அறிவுரை எனக்கு பொருத்தமற்றது.

"சந்தர்ப்பவாதம், பணத்துக்கும், பதவிக்கும் விலை போவது" என்ற குணாதிசயங்கள் என்ன, தமிழ் சமூகத்தில் இல்லையா? அட, என் கட்சியிலே, என் குடும்பத்திலேயே, என் பக்கத்தில் இருந்தவர்களாலேயே இவை முன்னின்று நடத்தப்பட்டு என் முதுகில் குத்தப்பட்டதே! "காட்டியும், கூட்டியும்" என்ற சொற்பிரயோகங்களை கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், இவை பலமுறை கேட்டு சலித்துப்போன அரசியல் கெட்ட வார்த்தைகள்தான்.
ReplyDeleteMANO GANESH AN AVARKALIN PANBAANA KUNATTHAI KAADDUKIRATHU...
As compare to our so called Muslim Leaders, He is above all of them. Muslims in Colombo should vote for him in the next General Election.
ReplyDeleteபுண்பட்டு பண்பட்ட நெஞ்சத்தின் அன்பு,பண்பு, பொருள் நிறைந்த கருத்துக்கள். நன்றிகள் திரு மனோகணேசன் அவர்களே.
ReplyDeleteமஹ்றூப் நிந்தவுர்.
Thanks you,it is very difficult to find such and fearless straight forward politician. I salute you.
ReplyDeleteMr. Mano you have given clear knowledge for those who always sleek within the frame of racism do your wish as you said don't expect anything from this society but every action has reaction so your award will be given to you by your supreme god
ReplyDeleteoru arasiyal vathien karuthlla arasiyal yaniei karuthu
ReplyDeleteஎதையும் எதிர்பாக்கதாவன் பாக்கியவான்.ஏனென்றாள் அவன் ஒரு போதும் ஏமாற்றம் அடைவதில்லை
ReplyDeleteSir, Your selecting good way . I like to follow your way until ..............?
ReplyDeleteமனோ கனேசன் சார் அவர்களே! உப்பிட்டவரை உள்ளளவும் நினை,,என்பது போல் எமது சகோதரர் ஆஸாத் சாலி சார்பாகவும் எமது முஸ்லிம் சமூகம் சார்பாகவும் நீங்கள் குரல் கொடுத்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.எமது அரசியல் வரலாறும் தங்களின் இந்த பெருந்தன்மையை நன்றியுடன் நினைவு கூறும் என்பதில் ஐயமில்லை.கற்றாரைக்கற்றாரே காமுறுவர் என்பது போல் பாதிக்கப்பட்டவனுக்குத்தான் பாதிக்கப்பட்டவர்களின் ரண வலியையுணர்ந்துகொள்ள முடியும்.சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து ,உயர்மட்டம் வரை சகல தரப்பினரையும் புரிந்துள்ள நீங்கள் அரசியல் முதிர்ச்சி அடயப்போவதில் சந்தேகமில்லை.
ReplyDeleteandha thamilarmuslimgalai appadi kooruwar endral muslimgal thamilargalai enna endru sollwadhu....80 kalil inawadha padukolaigalin podhu thamilanukku thamadhu uyiraiyum panayuan weiththu ottu moththa thamilanukku padhukappu waliyangiyadhu muslimgale...awargalin soththu,udaimai,uyir ellam padhukaththadhu musligale....appadi udhawi saidha muslimgalai thane jaffnawil irundhu oru maniththiyalaththil ella udaimaigalaiyum,soththugalayum abagariththu wittu wiratti adiththanar tamilrgal idhatku enna endru sollwadhu........
ReplyDeleteமனோ கணேசன் அவர்களே உங்களது இந்த வார்த்தைகள் உங்களது அரசியல் நாகரிகத்தை கட்டுகின்றன.
ReplyDeleteஇந்த அனுபவ முதிர்ச்சியும் பக்குவமும் தான் ஒரு அரசியல்வாதிக்கு இன்றியமயாதது. நீங்க நல்லா வரனும், சிங்களவன் தமிழன் சோனகன் என்ற பேதம் இல்லாமல் எங்கு அநீதி நடந்தாலும் அதை தட்டி கேட்க வேண்டும்.
எதிர்பார்ப்பு எதுவும் இன்றி சேவை செய்பவனே உண்மையான தலைவன்.பாராட்டுக்கள் சகோதரனே keep it up
தற்போது உள்ள நிலவரம்போல ஒருபோதும் நாட்டில் இருக்கவில்லை இந்தக்கொடியவர்களின் ஆட்சி எல்லோரும் ஒன்று சேர்ந்து இக்கொடியவர்களின் கொட்டங்களை அடக்க முயற்சிசெய்யுங்கள்... நாட்டில் என்ன நடக்கின்றது இது தொடரக்கூடாது...
ReplyDelete