விரும்பத்தகாத விடயங்களை அன்பினால் எதிர்கொள்ள வேண்டும் - பசீர்சேகுதாவூத்
(எம்.எம்.எம். ரம்ஸீன்)
மத்திய மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் ஜுன் மாதம் நடைபெறும் என்று உற்பத்தித்துறை ஊக்குவிப்பு அமைச்சர் பசீர்சேகுதாவூத் குறிப்பிட்டார். கெலிஓயா கலுகமுவ முஸ்லிம் மத்திய கல்லூரியில் விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் கலுகமுவ தரீக்காக்கள் சம்மேளன பரிசளிப்பு விழா என்பவற்றில் 04.05.2013 இன்று கலந்து கொண்டு அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
முஸ்லிம்கள் மத்தியில் ஒற்றுமை அவசியம். நாம் அடிப்படை முரண்பாடுகளுக்கு மத்தியில் இணக்கப்பாட்டை கடைபிடித்து ஒற்றுமைப்பட வேண்டும். இன்று உலகளாவிய ரீதியில் வன்முறைகளால் அதிகம் உயிரிழப்புக்களை சந்திக்கும் சமூகம் முஸ்லிம் சமூகமாகும். முஸ்லிம் சமூகத்தில் காணப்படும் பிளவுகளை சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி மேற்குலகம் முஸ்லிம் நாடுகளில் வன்முறைகளை ஊக்குவித்து வருகின்றது. இன்று டியுனீசியா , ஜோர்டன்,சிரியா . எகிப்து , ஈராக் , யமன் என்று சகல முஸ்லிம் நாடுகளிலும் தினமும் பிரச்சினைகள் இடம்பெற்று வருகின்றன. நாம் எமக்கு எதிராக இடம்பெறும் விரும்பத்தகாத விடயங்களை அன்பினால் எதிர்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இதில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க உட்பட மாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
adiakkal naatuvathatkellam vila ???????????????
ReplyDelete"
எங்க ஜனநாயகம் உரிமை பறிக்க படுகிறது .....
ReplyDeleteஏன் இன்னும் நீங்கள் மௌனமாக இருகின்றிர்கள்
உங்கள் பதவிதான் உங்களுக்கு பெரிது என்றால் ............................................................................................ஓபென சொல்லுங்க