Header Ads



மியன்மார் முஸ்லிம்கள் மீதான குடும்ப கட்டுப்பாட்டை கண்டிக்கிறது அமெரிக்கா

(மக்தூம்)

ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு  எதிரான பிறப்பு கட்டுப்பாட்டு கொள்கையை  உடன்  நிறுத்த அழைப்பு ரோஹிங்கிய சிறுபான்மை முஸ்லிம்களுக்கு  எதிராக  மியன்மார் அரசு பிறப்பித்துள்ள பிறப்பு கட்டுப்பாட்டு கொள்கையை நடைமுறைப் படுத்துவதை தாமதமின்றி உடன் நிறுத்துமாறு மியன்மார் அரசுக்கு அமெரிக்கா இன்று வேண்டுகோள் விடுத்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் பேட்ரிக் வென்றல் இது பற்றி கருத்து வெளியிடுகையில்,

மியன்மாரில் அராகான் மாநிலத்தின் இரண்டு வெவ்வேறு நகரங்களில் ரோஹிங்கிய முஸ்லிம் குடும்பங்கள் இரண்டுக்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுப்பதை கண்டிப்பாக தடை செய்யும் வகையில் அதிகாரிகள் பிறப்பித்துள்ள பிறப்பு கட்டுப்பாட்டு கொள்கை விடயத்தில்  அமரிக்கா கவலை அடைகிறது என தெரிவித்துள்ளார்.

கட்டாய குடும்ப கட்டுப்பாட்டு கொள்கைக்கு எதிரான கொள்கையையே அமரிக்கா கொண்டுள்ளது என மேலும் சுட்டிக் காட்டிய அவர் எனவே இந்த கொள்கையை தாமதமின்றி உடன் நிறுத்துமாறு மியன்மார் அரசை வலியுறித்தியுள்ளார்.

குறித்த கட்டாய பிறப்பு காட்டுப்பாட்டு கொள்கையானது சர்வதேச மரபுகளில் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ள மனித உரிமை மீறலாகும் என சுட்டிக்காட்டிய சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW)  அக்கொள்கையை அமலாக்குவதை உடன் நிறுத்திக் கொள்ளுமாறு மியன்மார் அரசை வேண்டிக்கொண்டுள்ள தோடு தனது கண்டனத்தை அண்மையில் வெளியிட்டுருந்தமை குறிப்பிடத் தக்கது.

No comments

Powered by Blogger.