ஆக்கிரமிப்பு இஸ்ரேல் விமான தாக்குதல் - ஜிஹாத் போராளி வீரமரணம் (வீடியோ)
காசா மீதான இஸ்ரேல் வான் தாக்குதலில் பலஸ்தீன போராளி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். சலபி ஜிஹாத் குழுவை சேர்ந்த 23 வயதான ஹய்தான் அல் மிஷால் என்பவரே கொல்லப்பட் டிருப்பதாக காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
இஸ்ரேல் - காசாவுக்கு இடையில் கடந்த நவம்பரில் இடம்பெற்ற யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு பின்னர் இஸ்ரேலின் உயிர்ப்பலி கொண்ட முதல் வான்தாக்குதல் இதுவாகும். அண்மைக்காலத்தில் இஸ்ரேல்-காசாவுக்கு இடையில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
கொல்லப்பட்ட மிஷால் ஆயுதம் தயாரிப்பவர் என்றும் அவர் பல ஆயுதக் குழுக்களுக்கு ரொக்கெட்டுகள், குண்டுகளை தயாரிப்பதாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment