தொழிலாளர் தினம் - சிறப்பு படங்கள் இணைப்பு
மே முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினமாகும் இந்த வகையில் உலகில் பல்வேறு நாடுகளிலும் பல்வேறு விதமாக தொழிலாளர் இத்தினத்தை கொண்டாடுகின்றனர். எனினும் இதுவரையிலும் இத்தினத்தால் ஆக்கபூர்வமான நன்மைகளை தொழிலாளர்கள் பெற்றுக் கொள்ளவில்லை என்ற கருத்தும் தொழிலாளர் வர்க்கத்தினராலும் புத்தி ஜீவிகளாலும் முன்வைக்கப்பட்டு வருகின்றமையையும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியதொரு சந்தர்ப்பமாகும்.
இக்கருத்து முன்வைக்கப்படுவதற்கான காரணங்களில் ஒன்று தொழிலாளர்களை பாதுகாக்கின்றோம் என்று ஒரு சிலரைத் தவிர ஏனைய முதலாளி வர்க்கத்தினர் பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களிலும் ஏமாற்றி வருகின்றனர்.
அரசாங்கம் கூட தொழிலாளர்களை கீழ் மட்டத்திற்கு இட்டுச் செல்கின்றன. அவர்களின் தொழில் உரிமைகளை பாதுகாக்கத் தவறி விடுகின்றன. இதனை சாதகமாகப் பயன்படுத்தி முதலாளி வர்க்கத்தினர் முன்னேற்றம் அடைகின்றனர். இதன் காரணமாக தொழிலாளர்கள் தமது பிரச்சினைகளை வெளிக் கொண்டு வர முடியாது அடிமைப்படத்தப்பட்டவர்களாக வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு பின்தள்ளப்படுகின்றனர்.
தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்க்கவேண்டுமானால் ஒவ்வொரு அரசாங்கங்களும் தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களை உரிய முறையில் கடைப்பிடித்து அவர்களை பாதுகாக்கும் விடயத்தில் சட்டங்கைள செயல் வடிவில் உருக் கொடுக்கவேண்டும்.
இந்த விடயங்களில் கவனம் செலுத்தாது ஊர்வலங்களையும், பேரணிகளையும் ஏன் களியாட்ட நடவடிக்கைகளையும் மேற் கொள்வதால் எந்தவிதப் பயன்களும் தொழிலாளர் வர்க்கத்தினருக்கு கிட்டப்போவதில்லை.





Post a Comment