பந்து வடிவத்தில் உருண்டையாக உருமாறும் செல்போன்
மக்களின் அத்தியாவசிய தேவைகளில் செல்போனும் ஒன்றாகி விட்டது. தொடக்கத்தில் சாதாரணமாக இருந்த செல்போன், பின்னர் தொடுதிரை ஆனது. அளவில் பெரியதாக இருந்தவை கைக்கு அடக்கமாக வந்து விட்டன.
தற்போது, நீண்ட வடிவத்தில் இருக்கும் அவை பந்து போன்று உருண்டையாக உருவம் மாற உள்ளன. டாக்டர் ஆன்னி ரவுடவுட்டும், இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்ரீராம் சுப்பிரமணியனும் இவ்வகை செல்போன்களை உருவாக்கி வருகிறார்கள்.
ஸ்ரீராம் சுப்பிரமணியம் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை பேராசிரியராக பணிபுரிகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து செல்போன்களின் வடிவத்தை மாற்றியமைத்து புரட்சி படைக்க உள்ளனர்.
செல்போன்களில் ஒருவருக்கு எஸ்.எம்.எஸ். மூலம் வரும் செய்திகளை பலர் பார்க்காமல் பாதுகாக்கும் வகையில் அவற்றின் உருவம் மாற்றப்படுகிறது. மேலும், முக்கிய தகவல்களை டவுன்லோடு (பதிவிறக்கம்) செய்யும் வசதியும் புதிய வடிவ செல்போனில் இடம் பெறுகிறது.

Post a Comment