அரசாங்கம் கைதுசெய்ய நினைத்தால் கைதுசெய்கிறது, நினைத்தால் விடுதலை செய்கிறது
அரசாங்கம் சட்டத்தை இரண்டு தரப்பினருக்கும் இருவேறு விதத்தில் நடைமுறைப்படுத்துவதாக மக்கள் விடுதலை முன்னணியின் அரசியற்குழு உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
மாத்தளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோத அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது, அரசாங்கம் எவரையேனும் கைதுசெய்ய வேண்டுமென நினைத்தால் அவர்களைக் கைதுசெய்கிறது, எவரையேனும் விடுதலை செய்ய நினைத்தால் அவர்களை விடுதலை செய்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Nf

இன்று இதுபோன்ற அறிவித்தல்களைக் கொடுப்பது நாளை அரசாங்கத்தில் எலும்புக்கும் கம்புக்கும் வாலாட்டுவது. சும்மா அறிவித்தல் விடாம அரசாங்கம் செய்யும் ஊழல்களை ஆதாரங்களுடன் கண்டுபிடியுங்கள், அல்லது அடாவடித்தனமான அரசாங்கத்துக்கு முடிவுகட்டுங்கள், இதைவிட்டு அறிவித்தல் விடுவது இப்ப ரொம்ப அவசியம்தான்.
ReplyDeleteகாட்டு தர்பார் ஆட்சி என்பது அதுதான். அழிவின் ஆரம்பம்.
ReplyDelete