Header Ads



காத்தான்குடி கடற்கரையில் ஜனாஸா மீட்பு (படங்கள்)



(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு-காத்தான்குடி வங்காளா விரிகுடா கடற்கரையில் அன்வர் பள்ளிவாயலுக்கு அருகாமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 76 வயது முஸ்லிம் வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட முஸ்லிம் வயோதிபர்; அலியார் முஹம்மது இப்றாஹீம் வயது 76 எனவும் ,எட்டு பெண் பிள்ளைகளின் தந்தை எனவும் தனது மாமா எனவும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில் அலியார் முஹம்மது இப்றாஹீம் என்னுடைய மாமா பள்ளிவாயலில் முஅத்தினாக பல வருடங்கள் கடமையாற்றி தற்போது வீட்டில் ஒய்வு பெற்று வந்ததாகவும் இன்று லுஹர் தொழுகைக்காக சுமார் 12 மணியளவில் வீட்டில் இருந்து பள்ளிவாயலுக்கு வந்தவர் கடற்கரையில் உள்ள சவுக்கு மரத்தில் தனது துவிச்சக்கரவண்டியை  சாய்த்து விட்டு கடலுக்கு வந்தவர் விழுந்து இருக்கலாம் எனவும் சரியாக என்ன நடந்து என்பதை கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் பிரதேச மக்களினால் காத்தான்குடி பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட இவரை ஜனாசா நல்லடக்கம் செய்வதற்கான நடவடிக்கையில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர ஈடுபட்டுள்ளார். குறித்த சம்பவம் மிக சிறிது நேரத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 





1 comment:

Powered by Blogger.