கல்முனை முதல்வரின் பிரத்தியேக செயலாளர் இல்லத்திற்கு கல் வீச்சுத் தாக்குதல்
(அகமட் எஸ். முகைடீன் + எம்.ஏ.எம்.நியாஸ்)
கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் பிரத்தியேக செயலாளர் ஏ.எல்.எம்.இன்ஸாத்தின் இல்லத்திற்கு இன்று (04.05.2013) இரவு 10 மணியளவில் இனம் தெரியாத நபர்களால் கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேற்படி தாக்குதலில் வீட்டு ஜன்னல்கள் சேதமாக்கப்பட்டுள்ளது. இதன்போது வீட்டில் இருந்த எவருக்கும் காயங்கள் இல்லை. இது தொடர்பில் கல்முனை பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Post a Comment