Header Ads



காத்தான்குடி கடற்கரை வீதி அபிவிருத்தியை துரிதப்படுத்த ஹிஸ்புல்லா உத்தரவு



(பழுளுல்லாஹ் பர்ஹான்)

பிரதியமைச்சரின் கண்டிப்பான உத்தரவையடுத்து காத்தான்குடி கடற்கரை வீதியின் அபிவிருத்தி வேலைகள் துரித கதியில்-நோண்புப் பெருநாளுக்கு முன்னர் சகல வேலைகளும் பூர்த்தியடையும்

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிட்குட்பட்ட காத்தான்குடி கடற்கரை வீதியின் அபிவிருத்தி வேலைகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றன.

ஏலவே காத்தான்குடி கடற்கரை வீதியின் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு  பல மாதங்களாகியும் தொடர்ச்சியான மழை காரணமாகவும் பொறுப்பேற்றுள்ள கொன்தராத்துக்காரர்களின் அசமந்தப் போக்குகளாலும் தொடர்ந்து செப்பனிடப்படாமல் இருப்பதால்; பல்வேறுபட்ட சிரமங்களை பாதசாரிகளும் பொது மக்களும் எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.

இது தொடர்பாக மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பதில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் எதிர்வரும் ஜூலை மாதம் 30ம் திகதி முடிவடைவதற்குள் காத்தான்குடி கடற்கரை வீதியின் அபிவிருத்தி வேலைகள் முழுமையாக பூர்த்தியடைய வேண்டுமென்று சம்பந்தப்பட்ட திணைக்களத் தலைவர்களுக்கும் கொங்தராத்துக்காரர்களுக்கும் விடுத்த கடுமையான உத்தரவையடுத்தே குறித்த அபிவிருத்திப் பணிகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றது.

குறித்த வீதியிலுள்ள வடிகான்கள் முதலாவதாக சீரமைக்கப்பட்டு வருவதுடன் ஏனைய அபிவிருத்தி வேலைகளும் இடம்பெற்று வருகின்றன.

குறித்த கடற்கரை வீதியில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலை,காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலய தேசிய பாடசாலை,இலங்கைப் போக்குவரத்துச் சபை காத்தான்குடிச் சாலை என்பன உள்ளதால் இது மக்கள் அதிகம் பாவிக்கும் பாதையாக காணப்படுகிறது.

புனித நோன்புப் பெருநாளை முஸ்லிம்கள் ஓகஸ்ட் மாத முதல் வாரத்திலே கொண்டாட இருப்பதால் அதற்கு முன்னர் குறித்த வீதியின் சகல அபிவிருத்தி வேலைகளும் ஜூலை மாதம் 30ம் திகதிக்கு முன்னர் முடிவடையவுள்ளதாகவும் இதில் மேலும் அசமந்தப்போக்கில் ஈடுபடுகிறவர்களுக்கு கொடுப்பணவுகள் இடைநிறுத்தப்டும் என பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



1 comment:

  1. பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவை இந்த வீதி விடயத்தில் இந்தளவுக்கு அக்கறை கொள்ள வைத்தது உள்ளுர் மற்றும் மாகாண மட்டத்தில் வெளிவரும் அச்சு ஊடகங்களே என்றால் அது மிகையன்று!

    வாரந் தவறாமல் இந்த வீதியிலுள்ள வர்த்தகர்களும், இவ்வீதியைப் பயன்படுத்துவோரும் படுகின்ற அவஸ்தைகளை படம் பிடித்தும், பக்கம் பக்கமாகச் செய்திகள் எழுதியும் கரைச்சல் படுத்திய தொல்லை பொறுக்க முடியாமல்தான் அவர் இவ்வளவு கறாராக கால எல்லை விதித்து சம்பந்தப்பட்ட கொந்தராத்துக்காரார்களுக்கும், திணைக்கள அதிகாரிகளுக்கும் உத்ரவோ எச்சரிக்கையோ செய்துள்ளார்.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete

Powered by Blogger.