ஏறாவூரில் வாகன விபத்து - இருவர் வபாத்
(அப்துல்லாஹ்)
சற்று முன்னர் ஏறாவூர் மைலம்பாவெளியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இன்று (19.05.2013) மாலை ஏழரை மணியளவில் விபத்து நேரிட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள் வீதியில் தடக்கி விழுந்ததிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது. அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவரும் பின்னால் அமர்ந்து சென்றவரும் வீதியில் தூக்கி வீசப்பட்டு காயம் பட்டதில் பலியாகியுள்ளனர்.
ஏறாவூரைச் சேர்ந்த அஹமது லெப்பை முஹம்மது அஸ்மி வயது 30 மற்றும் பிச்சைக்குட்டி முஹம்மது றியாழ் வயது 31 ஆகிய இருவரே கொல்லப்பட்டுள்ளனர். சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இருவரும் ஏறாவூரில் இருந்து காத்தான்குடி நோக்கி சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது.
மரணித்தவர்களில் ஒருவரான அஹமது லெப்பை முஹம்மது அஸ்மி என்பவர் மட்டக்களப்புப் போதனா வைத்தியசாலையின் சிற்றூழியர் என்று தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Inna lillahi wanna ilaihi raajioon
ReplyDeleteInna lillahi wanna ilaihi raajioon
ReplyDelete