மலேஷிய அரசியல் வாதிகளை தாக்கிய இலங்கையர்கள் கைது
(Nf) மலேஷியாவின் அரசியல்வாதி ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இரண்டு இலங்கையர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து 2 இலங்கையர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று மலேஷியாவின் பிடோர் நகரில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 32 வயதான அரசியல்வாதி அவரது காரில் பயணித்துக்கொண்டிருந்த போதே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக மலேஷிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு கார்களில் வந்து வீதியை மறித்து அரசியல்வாதியை தாக்கியதாகக் கூறப்படும் சந்தேகநபர்களின் அடையாளத்தை உறுதிசெய்வதற்கான ஆரம்பகட்ட விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி மலேஷிய பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment