Header Ads



சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு மூலம் சிறந்த கல்விசார் சமூகத்தை உருவாக்க முடியும்


(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

சமூகத்தின் கூட்டுப் பொறுப்பும், ஒத்துழைப்புத் தன்மையினையும் பெற்றோர்கள் பாடசாலைக்கு வழங்குவதன் மூலம் சிறந்த கல்வி சார் சமூகத்தை உருவாக்க முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான ஹூனைஸ் பாருக் கல்விப் பொதுத் தராதர உயர் தர மாணவர்களின் முன்மாதிரி பாராட்டுக்குரியது என்றும் கூறினார்.

குருநாகல் மாவட்டத்தில் வெல்பொதுவேவ  அல் இல்மியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம் பெற்ற உயர் தர வகுப்பு மாணவர்களுக்கானஅனுமதி வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் மேற்கண்டவாறு கூறினார். பாடசாலை அதிபர் எம்.முஸ்தபா தலைமையில் இடம் பெற்ற இந்ந நிகழ்வில் மேலும் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்,

இப்பாடசாலையின் வரலாற்றில் கடந்த இரு வருடங்கள் முக்கியமானதொன்றாகவே பார்க்க முடிகின்றது. 20102 ஆம் ஆண்டு பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய 20 பேர் உயர் கல்வி கற்கைக்கும்,பல்கலைக்கழகத்துக்கும் தெரிவாகியுள்ளனர்.இந்த பாடசாலையினை பொருத்த வரை இது ஒரு நல்லதொரு அடைவு மட்டமாகும்.அதனை அறிந்து கொண்டு தமது உயர்; கல்வியினை தொடர்வதற்கு இம்முறை 60 மாணவர்கள் பல தூர பிரதேசங்களிலிருந்தும் வருகைத் தந்துள்ளதாக அறிகின்றேன்.

கல்வி என்பது ஒரே இடத்தில் குவித்து வைக்கபட்டுள்ள பொருட்கள் அல்ல,மாற்றமாக பரந்து,விரிந்து கிடக்கும் சமூத்திரத்தின் ஆழத்தில் சென்று அதனை கற்கும் ஒன்றாக நாம் கருத வேண்டும். அப்போதுதான் எமது எதிர் கால இலட்சியத்தை அடைந்து கொள்ள முடியும்.அவ்வாறான கல்வியின் மூலம் ஒரு சிறந்த மாரக்க பற்றுள்ள, நல்லதொரு சமூகத்தை உருவாக்க முடியும்.

இன்றைய காலகட்டம் என்பது மிகவும் ஆபத்தும்,அச்சுறுத்தல்களும் கொண்டதாக இருக்கின்றது. இதிலிருந்து விடுபட்டு செல்வதற்கு கறிப்பாக உணர் தர வகுப்பு மாணவர்கள் கைத்தொலைபேசியின் பாவணைகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆலோசனையினை முன் வைக்க விரும்புகின்றேன் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் கூறினார். 

No comments

Powered by Blogger.