Header Ads



சவூதி அரேபியாவில் வாகன விபத்து - இலங்கைப் பணிப்பெண் உட்பட ஐவர் மரணம்


(அப்துல்லாஹ்)

சவூதி அரேபியாவின் மதீனா நகரில் கடந்த வியாழனன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஏறாவூரைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண் உட்பட வீட்டு எஜமானி குழந்தைகள் என ஐவர் பலியாகியுள்ளனர்.

திருமண வைபவத்திற்குச் சென்று கொண்டிருந்தபோதே இந்த வாகன விபத்து நடந்துள்ளாக தங்களுக்கு அறிவிக்கப்பட்டதாக சவூதி விபத்தில் பலியான இலங்கை ஏறாவூரைச் சேர்ந்த பணிப்பெண்ணின் சகோதரி வெள்ளக்குட்டி முஹைதீன் ஹஸீனா தெரிவித்தார்

ஏறாவூர் ஹிதாயத் நகரைச் சேர்ந்த வெள்ளக்குட்டி முஹைதீன் ஜனூபா வயது 39 என்பவரே சவூதியில் பலியான வீட்டுப் பணிப்பெண்ணாகும். இவருக்கு மூன்று குழந்தைகள் உண்டு.

திருமண வீடொன்றுக்குச் சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் இலங்கைப் பணிப்பெண், வீட்டு எஜமானி, மற்றும் எஜமானியின் குழந்தைகள் மூவரும் பலியாகியுள்ளனர்

ஜனாஸா நல்லடக்கத்தை மதீனா நகரிலேயே மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

2 comments:

Powered by Blogger.