தேசிய வைத்தியசாலையின் முன் ஆஸாத் சாலியின் ஆதரவாளர்கள்..!
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டு சிகிச்சைபெற்று வரும் ஆஸாத் சாலியை தமக்கு காண்பிக்க வேண்டுமென வலியுறுத்து பெருமளவிலான ஆஸாத் சாலியின் ஆதரவாளர்கள் தேசிய வைத்தியசாலைக்கு முன் கூடிநிற்பதாக மூத்த முஸ்லிம் ஊடகவியலாளர் ஒருவர் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார்.
நேற்று வெள்ளிக்கிழமை மாலை நேரம் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆஸாத் சாலி அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையிலேயே ஆஸாத் சாலியை தாம் பார்வையிட வேண்டும் அல்லது ஆஸாத் சாலியை தமக்கு காண்பிக்க வேண்டுமென வலியுறுத்து அவரது ஆதரவாளர்கள் வைத்தியசாலையின் முன் கூடிநிற்பதாகவும் அந்த மூத்த ஊடகவியலாளர் தெரிவித்தார்.

Post a Comment