ஆஸாத் சாலியை சுமந்திரன் எம்.பி. பார்வையிட்டார்
தேசிய வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டு, சிகிச்சைபெற்று வரும் ஆஸாத் சாலியை இன்று சனிக்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பார்வையிட்டுள்ளார்.
48 மணித்தியாலத்திற்கும் மேலாக உணவின்றியும், நீர் பருகாமலும் காணப்படும் ஆஸாத் சாலி தொடர்ந்தும் இதே போராட்டத்தை முன்னெடுப்பாராயின் அது அவருக்கு தொடர் பாதிப்புகளை ஏற்படுத்தலாமென வைத்தியர்கள் சிலர் சுமந்திரன் எம்.பி.யிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆஸாத் சாலியை பார்வையிட சுமந்திரன் எம்.பி.க்கு ஆரம்பத்தில் குற்றப் புலனாய்வு பிரிவினர் அனுமதி மறுத்திருந்த போதிலும், பின்னர் குற்றப்புலனாய்வு உயர் அதிகாரிகளின் நேரடி உத்தரவின் கீழ் அவருக்கு ஆஸாத் சாலியை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதிகார அடக்குமுறையின் வலி தெரிந்தவர்கள்தான் அடக்கப்பட்டவர்களின் நிலைமைகளைச் சென்று பார்வையிடுவார்கள்.
ReplyDeleteஅதிகாரத்தைக் கொண்டு அவரை அடைக்க வைத்தவர்கள் அல்லது அடங்கிக் கிடப்பவர்கள் எந்த முகத்தோடு சென்று அவரைப் பார்ப்பார்கள்?
பொறுத்திருந்து பார்க்கலாம்!
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-